(Reading time: 9 - 17 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொட்டுப் பார்க்க அந்த வெப்பத்தில் உண்மை நிலையை உணர்ந்து கொண்டான்.

அவளின் ஏக்கத்தை புரிந்து கொண்டவன் குயிலி நான் தான் வந்து விட்டேனேமா... இனி உன்னை விட்டு எங்கேயும் செல்ல மாட்டேன். இது பிராமிஸ் என்று சொல்ல முகம் நிமிர்த்தி பார்த்தவள் அப்பொழுதுதான் உணர்ந்தாள் அவன் மார்பில் தஞ்சம் புகுந்திருந்ததை.

சா.. சாரி என்றவள் ராகவ் என்றால் முகம் மலர்ந்த சிரிப்புடன்.

அவளது ராகவ்வென்ற அழைப்பில் இருந்த ஏக்கம் அவன் மனதை வருட அவள் கண்களும் மீண்டும் அவள் கழுத்து வளைவில் இருந்த தழும்பை நோக்கி சென்றது.

இத்தனை நாள் ஏதாவது நினைவு வந்ததா என்று மட்டும் கேட்டவன் இப்பொழுதோ தன் கையை நீட்டி தன் விரலால் அந்த இடத்தை தடவினான்.

பெண் அவளுக்கு முதன் முதலாக தன் மீது பட்ட ஆடவனின் ஸ்பரிசத்தால் உடல் சிலிர்த்தது. அவன் மனம் நோகாமல் வெடுக்கென்று நகராமல் ஆனால் சற்று தள்ளி நின்று கொண்டாள்.

அவனும் மீண்டும் அதைப் பற்றி எதுவும் கேட்காமல் சாரிடா குயிலி... நாலு வருடத்தில் வருகிறேன் என்று சொல்லிவிட்டு மேலும் ஆறு மாதம் உன்னை காக்க வைத்து விட்டேன்.

இனி உன்னை விட்டு எங்கேயும் போகமாட்டேன் என்று சொல்ல அவளும் உரிமையாக அவனின் கையை பிடித்துக்கொள்ள அந்த மரத்தடியிலேயே அமர்ந்துவிட்டனர்.

இருவரும் பேசுவதற்கு காரியங்கள் ஆயிரம் இருந்தாலும் பேச வார்த்தை தான் இல்லாமல் போய்விட்டது. இருவரும் விழிகளில் உறவாடி கொள்ள அந்த இடத்தில் பெரிய மௌனம் மட்டுமே வார்த்தையாக வினாவிக் கொண்டிருந்தது.

நேரம் கடந்து செல்வதை உணர்ந்த ராகவ் குயிலி இது நான் உனக்காக கொண்டு வந்த எனது சிறிய பரிசு என்று சொல்லி ஒரு கிப்ட்டை நீட்ட அவள் வாங்குவதா வேண்டாமா என்று யோசித்தாள்.

வாங்குவதற்கு என்ன தயக்கம் குயிலி.. இது உனக்காக நான் வாங்கியது என்று மென்மையாக கூறியவன் அதோடு கண்டிப்பாக வாங்கிக் கொள் என்று சொல்லி அவள் கையை பிடித்து கையில் வைத்தான் அந்த சிறிய பரிசு பொட்டலத்தை.

அதற்குமேல் அவளால் மறுக்க தோன்றவில்லை. அந்த பரிசை பிரித்துப் பார்த்தவள் அதில் இருந்த மொபைலை கண்டு மீண்டும் வினாவாக அவள் விழிகளை நோக்கி பார்த்தாள். இது நாம் பேசி கொள்வதற்காக.... இதனுள்ளே சிம் இருக்கிறது. என் நம்பர் சேவ் பண்ணி இருக்கிறேன் என்று சொல்ல அவளும் சரி என்று தலை அசைத்துக் கொண்டாள்.

குயிலி இப்போது நாம் கிளம்பலாம். தினமும் மெசேஜ் பண்ணு... கால் பண்ணு என்று சொல்ல அதை எல்லாம் சொல்லித்தான் செய்வேனா.. நீங்கள் சொல்லவில்லை என்றாலும் செய்வேன்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.