(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 15 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

காலையில் எழும்போதே மனதிற்குள் ஏதோ உறுத்தலாகவே இருந்தது தமிழ்செல்விக்கு. ஏதோ சொல்ல முடியாத வேதனை மனதை அறுப்பதை போல இருந்தது. அவளுக்கு இதே போன்ற உணர்வு இதற்க்கு முன் இருமுறை வந்தது உண்டு. அனால் அந்த இரு முறையும் அவளுக்கு ஏற்பட்ட இழப்பு மிக பெரிது. அவளுக்கு மிக நெருக்கமானவர்கள் அவளை விட்டு நிரந்தரமாக பிரிந்திருக்கிறார்கள். கையில் இருந்த அலைபேசியை எடுத்து வேகமாக கலைவாணியின் என்னை அழுத்தினாள்.

"தமிழ், என்னடா இவ்ளோ காலைல கூப்டருக்க? என்னாச்சு???" கலைவாணி பதட்டமாக பேசவும் தான் நேரம் காலை ஐந்தரை என்பதை உணர்ந்தவள், அவரை பதற்ற படுத்தியதை எண்ணி வருந்தியவள், "இல்லம்மா... ஒன்னும் இல்ல...நைட் உங்களை பத்தி கனவு கண்டேன். அதான் எழுந்ததும் பேசணும்போல இருந்துச்சு. வேற ஒன்னும் இல்லைம்மா" என இரண்டொரு நிமிடம் அவரிடம் பேசிவிட்டு வைத்தாள். குளித்து முடித்து நேராக பூஜை அறைக்குள் நுழைந்தவள் சில நிமிடங்கள் தியானத்தில் அமர்ந்தாள். மனசலனம் கொஞ்சம் மட்டு பட்டது போல இருந்தது.

அலுவலகம் கிளம்ப தயாரானவளுக்கு அம்மாவை பார்த்து விட்டு அலுவலகம் சென்றால் மனதிற்கு கொஞ்சம் நிம்மதியாக இருக்கும் என்று தோன்றவும் வெளியே வந்தவள் காரில் அவளுக்காக காத்து கொண்டிருந்த ராமிடம் சென்றாள். காரி ஏறாமல் திரிவர் இருக்கையின் புறமாக வந்தவள் "நான் இன்னைக்கு அம்மாவை பார்த்துட்டு மதியத்துக்கு மேல ஆபீஸ் வரட்டுமா?" என கேட்கவும், சில நொடிகள் அவளை பார்த்தவன் சரி என்பதாக தலையை அசைத்தான்.

"தேங்க்ஸ்" என்றவள் அங்கிருந்து நகர, "டிராப் பண்ணனுமா?" என்ற ராமின் குரலில் திரும்பியவள் "இ...இல்லை பரவால்லை உங்களுக்கு மீட்டிங் இருக்கு லேட்டாஇடும். நான் டாக்ஸில போயிக்கறேன்" எனவும் தோள்களை குலுக்கியவன் காரை கிளப்பவும் நித்யா ஓடி வந்து அவன் காதில் ஏதோ சொன்னவள் வேகமாக மறுபுறம் சென்று முன் பக்க கதவை திறந்து கொண்டு அவன் அருகே அமரவும், ஒரு முறை தமிழ்செல்வியை பார்த்த ராம், காரை கிளப்பினான். அவனின் பார்வைக்கு என்ன அர்த்தம் என தமிழ்செல்விக்கு புரியவில்லை. ஆனால் ராமின் அருகே அமர்ந்திருந்த நித்யாவின் பார்வைக்குள்ள அர்த்தம் அவளுக்கு தெளிவாக புரிந்தது.

டாக்ஸியை அழைத்து கிளம்பியவளுக்கு சில நாட்களுக்கு முன் அவளுக்கு காய்ச்சலாக இருந்தபோது நடந்தது எல்லாம் நினைவிற்கு வந்தது.  அந்த இரண்டு நாட்கள் அவன் அலுவலகத்தில் இருந்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்தான், அவன் இருக்கும் நேரம் எல்லாம்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.