(Reading time: 12 - 23 minutes)
Priyamaanavale
Priyamaanavale

செய்தது. ஆனால் இப்போது அது எல்லாம் ஓடி ஒளிந்து கொண்டது. யாருக்கும் தெரிய கூடாது என்று தான் வெளியே ஒன்றாக போவதும் வருவதுமாக இருப்பவர்கள் தங்களின் அறைக்குள் மட்டும் முறைத்து கொண்டிருக்கிறார்கள். அப்படி இருக்கையில் நித்யாவுக்கு எப்படி தெரிந்தது? அவளே அனுமானித்து கேட்கிறாளா இல்லை உண்மையாகவே ராம் தான் சொல்லி இருப்பாரா? அவளுக்கு யோசித்து தலையை வலித்தது.

எப்படி இருந்தால் என்ன தமிழ், ராம்க்கு உன்னை பிடிக்கவில்லை என்பது உண்மை தானே??? அதை இல்லை என்று சொல்லமுடியாதில்லையா அவள் மனம் கேள்வி கேட்க, இப்போது உடலும் மனமும் இருக்கும் நிலையில் யோசிப்பது அர்த்தமற்றது என்று உணர்ந்தவள் மருந்தின் மயக்கத்தில் உறங்கி போனாள்.

காரில் அமர்ந்திருந்த தமிழ்செல்விக்கு யோசனையாகவே இருந்தது. எதனால் மனம் உறுத்தலாகவே இருக்கிறது, அதற்க்கு ஏதாவது அடிப்படை காரணம் இருக்க வேண்டும் என்று தான் தன்னுடைய மனதில் இருந்த எண்ணங்களை எல்லாம் ஒருங்கிணைத்து யோசித்து பார்த்தாள். ஆனாலும் காரணம் பிடிபடவில்லை. ஒரு வேளை அம்மாவை பார்த்தாள் சமாதானமாகுமோ என்று எண்ணி தான் கிளம்பினாள்.

வாசலில் வந்து இறங்கியவளை கண்டதும் ஓடி வந்து அணைத்து கொண்டார் கலைவாணி.

அவர் கையால் சமைத்ததை சாப்பிட்டு அவருடன் சிறிது நேரம் பேசி கொண்டிருந்தவளுக்கு காலையில் இருந்த மனநிலை சற்று மாறியதை போல இருந்தது. அவரிடம் விடைபெற்று கொண்டு கிளம்பியவள் அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

மனதின் ஓரம் மீண்டும் முணுமுணுவென ஏதோ ஒன்று குடைந்து கொண்டிருக்க அதை மறக்கும் பொருட்டு தன்னை வேலையில் மூழ்கடித்து கொண்டவளை உடைக்கவென வந்தது அந்த தொலைபேசி அழைப்பு.

கைபேசி அழைக்கவும் அதை எடுத்து பார்த்தவளுக்கு தெரியாத எண்ணாக இருக்கவும் அந்த அழைப்பை ஏற்காமல் புறக்கணித்தாள். அழைப்பு முடிந்த அடுத்த நொடியே மீண்டும் அழைத்தது கைபேசி. அதே எண்...யார் இது என்ற யோசனையுடன் அழைப்பை ஏற்றவள் அந்த புறம் அழைத்தவரின் கேள்விக்கு "தமிழ்செல்வி தான் பேசறேன். நீங்க யாரு??" கையில் இருந்த பைலில் கவனம் செலுத்தியபடி பேசியவள் மறுமுனையில் சொன்ன தகவலில் கையில் இருந்த பைலை கீழே தவறவிட்டவள் அப்படியே மயங்கி சரிய அவளின் கைபேசி கீழே விழுந்து சிதறியது.

தன்னுடைய அறையில் பரத்துடன் எதையோ ஆலோசித்து கொண்டிருந்த ராம் தன்னுடைய கைபேசி அழைக்கவும் எடுத்து பார்த்தான். பாட்டியின் பெயரை பார்த்ததும் எடுத்து காதில் வைத்தவன், "சொல்லுங்க பாட்டி" என, "ராம்...ராம்...." அவரின் குரலில் இருந்த பதற்றத்தை

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.