(Reading time: 8 - 15 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 08 - ஜெபமலர்

னதை ஒருமுகப்படுத்தி தியானத்தில் அமர்ந்து இருந்தவளின் மனக்கண்ணில் மங்கலாக பிம்பங்கள் தோன்றியது. அவளோ அமைதியோடு பிம்பத்தை கூர்ந்து நோக்க அம்மா என்றபடியே ஒரு சிறுமி தாயின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அவளை கட்டி அணைத்தாள். அந்த சிறுமியின் முகத்தை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள்.

நானா... நானா என்று அவள் மனம் அங்கலாய்க்க குயிலி.. இங்கே வா என்று அவள் கையை பிடித்து இழுத்தான் ஒருவன். அவளை விட ஒரு ஐந்து வயது அதிகம் இருக்கலாம்.

அவன் யாராக இருக்கும் என்று குயிலி அந்த சிறுவனையே பார்க்க அவன் முகம் தெரிய வரும் அந்த நொடி, குயிலி.... எப்படியாவது தப்பித்து விடு என்று மிகுந்த சத்தத்துடன் அவளை பிடித்து தள்ளினான் ராகவ்.

அவன் தள்ளிய வேகத்தில் தியானம் கலைந்ததோடு கீழே விழுந்தாள் குயிலி. ராகவ்வோ ஆழ்ந்த நித்திரையில் தான் இருந்ததான்.

அப்படி என்றால் உண்மையில் என் பெயர் குயிலியா... அப்போ ராகவ் என்னை குயிலி என்று கூப்பிட்டதற்கு பின்னால் ஏதோ ஒரு காரணம் இருக்கிறது. அவனுக்கும் என்னை தெரிந்து இருக்கிறது. அப்படி என்றால் அந்த சிறுவன் ராகவ்வா????  என்றவளுக்கு பல குழப்பங்கள் தோன்ற தலைவலிக்க ஆரம்பித்தது. 

மீண்டும் ராகவ் முகத்தை நோக்கியவள் அவன் ஏன் தள்ளினான் என்று யோசித்தாள்... தன்னுடைய தியானத்தால் அவனுக்கும் ஏதோ நினைவு வந்து இருக்கிறது என்று புரிந்து கொண்டாள்.

ராகவ் ஆழ்மனம் முழுவதும் பழைய நினைவுகள் இருக்கிறது. ஆனால் அது வெளிவர முடியாமல் ஏதோ தடுக்கிறது. என்ன செய்யலாம் என்று யோசித்தவளை வானத்தில் தவழ்ந்து கொண்டிருந்த மேகங்கள் இழுத்தது.

***இந்த மேகங்கள் நீராவிகளால் நிறைந்திருக்கிறது. ஒரு கிரகத்தின் மேற்பரப்புக்கு மேலாக வளிமண்டலத்தில் மிதக்கும், சிறிய நீர்த்துளிகள் தான் மேகங்கள்.

நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின் மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு. 

இப்போது வானம் பார்த்த பூமியாக உள்ள விளைநிலங்கள் தண்ணீரே இல்லாமல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.