(Reading time: 14 - 28 minutes)
Priyamaanavale
Priyamaanavale

தொடர்கதை - பிரியமானவளே - 16 - அமுதினி

னக்கொரு சினேகிதி சினேகிதி தென்றல் மாதிரி

நீ ஒரு பௌர்னமி பௌர்னமி பேசும் பைங்கிளி

ந்த மிக பெரிய பங்களாவின் முன் வந்து நின்ற காரில் இருந்து கீழே இறங்கிய ராம் ஒரு நொடி அந்த இடத்தை பார்த்து மலைத்து போனான். அவனுடைய வீடே பங்களா தான் ஆனால் இந்த இடத்தில் அதை போல மூன்று வீடுகளை ஒன்றாக வைக்கலாம் போல இருந்தது.

கீழே இறங்கிய தமிழ்செல்வியை கண்டவன் அவளை பின் தொடர்ந்தான். அங்கே இருந்தவர்கள் கண்கள் எல்லாம் தமிழ்செல்வியின் மேலே இருந்ததை அவள் உணர்ந்தாளோ இல்லையோ ஆனால் ராம் அதை உணர்ந்திருந்தான்.

அங்கே உள்ளே கண்ணாடி பெட்டிக்குள் மலர் மாலைகளுக்கு நடுவே கிடந்தப்பட்டிருந்த தன்னுடைய தந்தையின் உடலின் அருகே சென்ற தமிழ்செல்வியின் கண்களில் இருந்து கண்ணீர் நிற்காமல் அருவி போல கொட்டிக்கொண்டிருந்தது. அவரது முகத்தை பார்த்தபடி அங்கேயே அமர்ந்தவள் மனம் முழுதும் அவர் அவளோடு கொஞ்சி விளையாடிய நாட்கள்.

அவரை வணங்கி அவரின் முகம் பார்த்த ராமிற்கு அவரது முகம் மிக பரிச்சயமானதாக தோன்றியது. யார் என்ற யோசனையுடன் அவரை பார்த்து கொண்டிருந்தவனின் யோசனையை கலைத்தது பின்னால் இருந்து கேட்ட அழைப்பு.

"ஹலோ மாமா நான் நந்தகோபால், இவரு அட்வகேட் மதிவாணன்." தன்னை மாமா என அழைத்து அறிமுகப்படுத்தி கொண்டவனை பார்த்தான் ராம். கிட்டத்தட்ட தமிழ்செல்வி வயதை ஒத்த இளைஞன். அவனது குழப்பமான பார்வையை உணர்ந்த அந்த இளைஞன் "நான் தமிழுடைய தம்பி" எனவும் இது வரை குழப்பம் அப்பியிருந்த பார்வையில் அதனுடன் அதிர்ச்சி+ஆச்சர்யம் சேர்ந்து கொண்டது.

"தமிழுடைய ரூம் மேல இருக்கு. உங்க ரெண்டு பேருடைய லக்கேஜையும் அங்க வெக்க சொல்லிட்டேன். உங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னை கூப்பிடுங்க" என சொல்லிவிட்டு நந்தகோபால் நகரவும் வக்கீல் மதிவாணன் ராமின் அருகே அமர்ந்தார்.

தமிழ்செல்வியின் மேல் பார்வையை பதித்திருந்த ராமை பார்த்தவர், "சார் கல்யாணத்துல உங்களை பார்த்துட்டு வந்ததுல இருந்து உங்க ரெண்டு பேரை பத்தியே தான் பேசிட்டு இருந்தார். மாப்பிளை ரொம்ப அழகா தமிழுக்கு பொருத்தமா இருக்கார். நல்ல குடும்பம். நெறய படிச்சிருக்கார், நல்லபடியா பிசினஸ் செய்றார்னு.அவரு அந்த மாதிரி சிரிச்சு சந்தோசமா இருந்து பார்த்து கிட்டத்தட்ட அஞ்சு வருஷம் ஆச்சு.ஹ்ம்ம்ம்...என்ன பண்றது...தமிழுடைய பிடிவாதம் அந்த மாதிரி. தமிழ் சின்ன குழந்தையா இருக்கும்போதுல இருந்து பார்த்துட்டு இருக்கேன். எல்லாரையும் ஈஸியா மன்னிச்சுடும் ஆனா அய்யாவை மட்டும் கடைசி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.