(Reading time: 14 - 28 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கண்டிப்பா அடுத்த ஜென்மத்துல நான் உனக்கு மகனா பிறந்து நான் பண்ணுன தவறை எல்லாம் சரி பண்ண முயற்சிக்கிறேன்.

உடம்பை பார்த்துக்கோடா...

என்றும் உன் நினைவுடன்

உன் அப்பா"

அவள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் துளி அந்த எழுத்துக்களில் பட்டு தெறித்தது.

கண்களை மூடி கண்ணீரை அடக்கியவள் தன்னை நிதானப்படுத்தி கொண்டு கண்களை திறந்தாள். அந்த கடிதத்தை அந்த கவரில் போட்டவள், வக்கீலின் புறம் திரும்பினாள்.

"அங்கிள், அந்த டாக்குமெண்ட்ஸ் ஒரு நிமிஷம் கொடுங்க" என்றவரிடம் அவர் தன்னுடைய கைகளில் இருந்த பைலை நீட்ட, அதை வாங்கியவள் அதை அப்படியே நந்தகோபாலின் கைகளில் வைத்தவள், "அங்கிள், என் பேருல அப்பா எழுதுன எல்லாத்தையும் நந்து பேருக்கு மாத்தணும் அதுக்கான ப்ரொசீஜர்ஸ் எல்லாத்தையும் கொஞ்சம் சீக்கிரம் ப்ரோஸ்ஸ்ஸ் பண்ணுங்க. நான் இங்க இருந்து கிளம்பறதுக்கு முன்னாடி எல்லா ப்ரொசீஜர்ஸையும் முடிச்சிடலாம்" எனவும் "தமிழ்....வேண்டாம்" அவசரமாக மறுத்தான் நந்தகோபால்.

"ஏற்கனவே நாங்க பண்ணுன தப்புக்கு எப்படி மன்னிப்பு கேக்கறதுனு தெரியாம இருக்கோம். இதையும் ஏத்துக்கிட்டா கடைசி வரைக்கும் குற்ற உணர்ச்சியோடவே வாழ வேண்டியது வரும். ப்ளீஸ் வேண்டாம்" அவளின் சித்தி மறுக்க, "சித்தி, நந்து இதை என்னோட மன்னிப்பா எடுத்துக்கோங்க. எல்லாரும் பாஸ்ட்டையே நினைச்சுட்டு வாழ முடியாது. நான் என்னுடைய வாழ்க்கையை வாழ்ந்துட்டு தான் இருக்கேன், நான் வாழணும்னு நினைச்ச வாழ்க்கையை வாழாததுக்கு எனக்கு இதெல்லாம் தேவை இல்லை. இதோ அப்பா எழுதுன இந்த லெட்டர் மட்டும் எனக்கு போதும். அப்பா கஷ்டப்பட்டு உருவாக்கின இந்த கம்பெனி, காலேஜ் எல்லாத்தையும் என்னால இப்போ நிர்வாகம் பண்ணவும் முடியாது. அதனால எல்லாத்தையும் உன் பேருக்கு மாத்தறேன் நந்தா. ப்ளீஸ் எனக்காக இதெல்லாம் எடுத்துக்கோ. நல்லபடியா எல்லாத்தையும் நீ பார்த்துக்குவென்ற நம்பிக்கைல தான் உன்கிட்ட எல்லாத்தையும் கொடுக்கறேன்" தமிழ்செல்வி சொல்ல, தயக்கத்துடன் தலையசைத்தான் நந்தா.

"தமிழ்செல்வி, அப்போ நான் டாக்குமெண்ட்ஸ் ரெடி பண்ணிடறேன். என்கூட கொஞ்சம் வரமுடியுமா? கொஞ்சம் டீடெயில்ஸ் சொல்லணும். அதுக்கு அப்பறம் நான் மத்ததெல்லாம் பார்த்துக்கறேன்" வக்கீல் சொல்லவும், "ஒரு நிமிஷம் அங்கிள்" என்று அவரிடம் அனுமதி பெற்றவள் தன்னருகே நின்றிருந்த ராமை பார்த்தாள்.

"கொஞ்சம் மேல வரிங்களா??" என்றவளுடன் அவளின் அறைக்கு வந்தவரிடம் மன்னிப்பு

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.