வந்துட்டாங்க. அவங்களை பத்தி பாப்பா அய்யாகிட்ட எந்த குறையும் சொன்னது இல்லை. யாரையும் எதுக்கும் எதிர்பார்க்காது. ரொம்ப புத்திசாலி. அய்யா கூட சொல்லிட்டே இருப்பாரு. பாப்பாக்கு பதினேழு வயசு இருக்கும்போதே அய்யா கூட சேர்ந்து அய்யா கூட கம்பெனிக்கு போகும். அய்யா வேலைக்கு ஒத்தாசையா இருக்கும். ஆனாலும் பாப்பாக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை. அவங்க அம்மா மாதிரி யாரும் உடம்பு முடியாம கஷ்டப்படக்கூடாதுனு சொல்லும். ஹ்ம்ம்...என்ன பண்றது எல்லாம் விதி...தம்பி நான் பேசறது தப்பான்னு தெரியல. நல்லா பார்த்துக்கோங்க தம்பி. தங்கமான பொண்ணு" அவர் சொல்லிவிட்டு வெளியேற யோசனையுடன் ஒரு முறை அவளின் அறையை சுற்றி பார்த்தான். அந்த வீட்டின் ஒவ்வொரு அடியும் பணத்தால் இழைக்கப்பட்டிருந்தது. அவள் வேண்டாம் என்று ஒதுக்கிய சொத்தின் மதிப்பு பலநூறு கோடி இருக்கும். இப்படிபட்டவளை இந்த அளவு வசதியாக வளர்ந்தவளை தான் அப்படி எல்லாம் பேசி அவமானப்படுத்தினோமா?? ஆனால் அவள் அன்று பேசியதை கேட்டேனே...அதற்கும் ஏதாவது காரணம் இருக்குமோ???? அவன் மூளை இப்போது தான் வேலை செய்ய துவங்கியது போல...மேஜையின் அருகே இருந்த இருக்கையை இழுத்து போட்டு அமர்ந்தவன் அதை திறந்து பார்த்தான்.
உள்ளே நிறைய மருத்துவ புத்தகங்கள்...அடுத்த பக்கத்தை திறந்து பார்த்தான். ஒரு பெரிய நோட்டு புத்தகம் போல ஒன்று இருந்தது. அது பெரிதாக கனமாக இருந்தததால் அதை இழுத்து பார்த்தான். அவன் இழுத்த வேகத்தில் அது கீழே விழ அதில் இருந்து சில புகைப்படங்கள் கீழே சிதறியது.
அந்த நோட்டு புத்தகத்தை கட்டில் மேல் வைத்தவன் அந்த புகைப்படங்களை எல்லாம் எடுத்தான். ஒவ்வொன்றாக பார்க்க தொடங்கினான்.
எல்லாமே தமிழ்செல்வியின் சிறு வயது புகைப்படங்கள். ஒன்றில் கூட அவள் சிரிக்காமல் இல்லை என சொல்லலாம். அவள் அப்பா, நண்பர்கள், உறவினர்கள் உடன் என நிறைய புகைப்படங்கள். ஒரு புகைப்படத்தில் அவன் கவனம் பதிந்தது. கையில் ஒரு சிறு பெண்ணை தூக்கி வைத்தபடி ஒரு பெண்மணி நின்றிருந்தார். பார்க்கும் போதே அது தமிழ்செல்வியும் அவளின் அம்மாவும் என புரிந்தது. அவளுடைய அம்மாவை உரித்து வைத்திருந்தாள் தமிழ்செல்வி.
ஒவ்வொன்றாக பார்த்து கொண்டிருந்தவன் ஒரு புகைப்படத்தை பார்த்ததும் அதிர்ந்து போய் நின்றான்.
ஒரு இளைஞனின் தோள் மேல் கைபோட்டு சிரித்தபடி நின்றிருந்தாள் தமிழ்செல்வி. கல்லூரி புகைப்படம் போல... அவன் யார்? அந்த இளைஞனை எங்கேயோ பார்த்ததை போல இருந்தது. ஆனால் யார் என டக்கென ஞாபத்திற்கு வரவில்லை அவனுக்கு. வேறு ஏதேனும்