(Reading time: 14 - 28 minutes)
Priyamaanavale
Priyamaanavale

முக்கியமான விஷயம் இப்பவே பேசிடலாம்னு நெனைக்கிறேன். இது சரியான சூழ்நிலை இல்லை. ஆனா இப்படி ஒரு சூழ்நிலை வரும்னு உங்க அப்பாக்கு முன்கூட்டியே தெரிஞ்சிருக்கு. அதான் அதற்கான முன்னேற்பாடு எல்லாம் செஞ்சிட்டு போயிட்டார்" என்றவர் அவர் கையில் இருந்த பெட்டியில் இருந்து ஒரு கவரை எடுத்து தமிழ்செல்வியிடம் நீட்டினார்.

"அப்பாவுடைய உயிலை படிக்கிறதுக்கு முன்னாடி இந்த லெட்டரை உன்கிட்ட கொடுக்க சொன்னாரும்மா" என்றவரிடம் இருந்து அந்த கவரை வாங்கியவள் அதை பிரித்து படிக்க தொடங்கினாள்.

அந்த கடிதத்தின் துவக்கத்தை படிக்க தொடங்கியதுமே அவள் அறியாமல் கண்களில் இருந்து வெள்ளம் கரைபுரண்டோட துவங்கியது.

"குட்டிம்மா, எப்படிடா இருக்க??? அப்பா உன்னை இப்படி கூப்டு எவ்ளோ நாள் ஆச்சுடா...அப்பாவை வேண்டாம்னு அப்படியே ஒதுக்கிட்டியா குட்டி?? அப்பா பண்ணுன தப்புக்கு மன்னிப்பு இல்லைனு எனக்கு தெரியும்டா...ஆனா நீ எனக்கு கொடுத்த தண்டனை மரணத்தை விட கொடுமையானது...ஆனா அப்படி பட்ட தண்டனைல தான் அப்பா உன்னை எவ்ளோ மிஸ் பன்றேன்னு எனக்கே புரிஞ்சுதுடா...

அப்பா கைபிடிச்சுக்கிட்டே தூங்குவியேடா... அப்பா இல்லாம இத்தனை நாள் எப்படிடா தூங்குன??? என்னால தூங்கவே முடியலடா குட்டிம்மா...உன்னை நினைக்காத நிமிஷமே இல்லைடா...

ஆனா உன் கல்யாணத்தை கண் குளிர பார்த்தேன்டா....அதுக்கு நான் கலைவாணி அம்மாக்கும் விசாலம் அம்மாக்கும் நன்றி சொல்லணும்...நான் பண்ணுன தப்பை எல்லாம் மன்னிச்சு என்னை கூப்பிட்டாங்க...மாப்பிள்ளையும் நீயும் ஒண்ணா கல்யாண மேடைல நிக்கும் போது என் மனசெல்லாம் நிறைஞ்சு போயிடுச்சுடா. எனக்கு இது போதும் குட்டிமா...

குட்டிமா அப்பா உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்டா...நான் பண்ணுன தப்புக்காக நீ தண்டனை அனுபவிக்கிரதை நினைக்கும் போது ஒவ்வொரு நிமிஷமும் நரகமா இருக்குடா... இந்த கடிதத்தை நீ படிக்கும் போது அப்பாக்கு இந்த நரகத்துல இருந்து விடுதலை கிடைச்சிருக்கு. ஆனாலும் அப்பா உன் பக்கத்துல நின்னு இந்த லெட்டரை படிக்கிறதை பார்த்துகிட்டு தான் இருப்பேன். என்னுடைய கடைசி விருப்பமா நான் எழுதி இருக்கற உயிலை ஏத்துக்கோடா... எனக்கு தெரியும் உனக்கு இதெல்லாம் பிடிக்காதுன்னு. உனக்கு அதை வெச்சு என்ன பண்ணனும்னு தோணுதோ அதை பண்ணுடா குட்டி...

கடைசி முறையா என்னை மன்னிக்க முயற்சி பண்ணுடா... மாப்பிளையை விசாரித்ததா சொல்லு...

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.