(Reading time: 14 - 28 minutes)
Priyamaanavale
Priyamaanavale

வரைக்கும் மன்னிக்கவே இல்லை. இந்த பிஎஸ்ஆர் குரூப்பின் மொத்த பொறுப்பையும் எடுத்துக்க வேண்டிய பொண்ணு அதெல்லாத்தையும் தூக்கி வீசிட்டு போயிடுச்சு" அவர் பேசிக்கொண்டே போக, "பிஎஸ்ஆர் குரூப்" என்ற வார்த்தைகளில் ராமிற்கு விளங்கியது தமிழ்செல்வியின் அப்பாவை எங்கு பார்த்தோம் என. மதிவாணன் அதற்க்கு பின் பேசியது எதுவும் அவன் காதுகளில் விழவில்லை. அங்கே வந்திருந்தவர்களை பார்த்தான். அத்தனை பேரும் விவிஐபிகள். கோவையின் மிகப்பெரும் தொழில் குழுமமான பிஎஸ்ஆர் குழுமத்தின் சேர்மேன் பி எஸ் ராமநாதன் தான் தமிழ்செல்வியின் தந்தையா???? அவளுடைய அம்மா எங்கே??? கலைவாணி அத்தைக்கும் இவளுக்கும் என்ன சம்மந்தம்??? அதிர்ச்சி நீங்காமல் தமிழ்செல்வியை பார்த்தான். இன்னும் என்னென்ன அதிர்ச்சிகள் தனக்காக காத்துக்கொண்டிருக்கிறது இங்கே??? எனும் கேள்வி அவன் மனதில் புயலாக எழுந்தது.

இறுதி சடங்குகள் எல்லாம் முடிந்து கூட்டம் மெல்ல கலைய தொடங்கியது. தமிழ் வக்கீலிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க அவளை பார்த்தபடி நின்று கொண்டிருந்த ராமின் அருகே வந்தார் ஒரு பெண்மணி.

"வணக்கம் மாப்பிள்ளை மன்னிக்கணும் உங்களை சரியா கவனிக்கமுடியலை" என்றவரை யார் என புரியாமல் ராம் நோக்க, அதற்குள் அவன் அருகே வந்த தமிழ், "சாரி இவங்களை அறிமுகப்படுத்த மறந்துட்டேன். இவங்க என் சித்தி" எனவும் மரியாதை நிமித்தமாக அவருக்கு வணக்கம் சொன்னான் ராம்.

"தமிழ்...." தயக்கத்துடன் தமிழை அழைத்த அவளுடைய சித்தி அவளின் பார்வையை சந்திக்க இயலாமல் பார்வையை தாழ்த்தினார்.

"தமிழ்...." அந்த பெண்மணியின் புறம் வந்து நின்ற நந்தகோபால் தமிழ் கைகளை பற்றினான்.

"எங்களை மன்னிச்சுடு தமிழ்" கண்கள் கலங்க அவன் மன்னிப்பு கேட்கவும் தன்னுடைய கைகளை அவனிடம் இருந்து விடுவித்தவள் "உங்களை மன்னிக்கிற தகுதி எனக்கு இல்ல நந்து" என்றாள்.

"அம்மாடி மன்னிப்பு கேக்கற தகுதி எங்களுக்கு இல்லைனு தெரியும். ஆனா இந்த அஞ்சு வருஷத்துல உங்க அப்பா, நந்துவை கம்பெனி எம்டி ஆக்குனாரு, என் பேருல சொத்து எழுதி வெச்சாரு ஆனா ஒரு வார்த்தை கூட எங்க கூட பேசல. கடைசி வரைக்கும் பேசாமயே போயிட்டாரு. நீ ஒருவார்த்தை மன்னிச்சிட்டேன்னு சொல்லு தமிழ்" அந்த பெண்மணி அவளின் கைகளை பிடித்து கொண்டு அழ, "சித்தி முடிஞ்சதை பத்தி பேச வேண்டாம். எனக்கு என் மேல தான் கோபமே தவிர உங்க மேல இல்லை. இனிமேல் இதை பத்தி பேச வேண்டாம்" தமிழ்செல்வி சொல்ல இவர்கள் பேசுவதை புரியாமல் பார்த்து கொண்டிருந்தான் ராம்.

அதற்குள் அவர்கள் அருகே வந்த வக்கீல், "தமிழ், எல்லாரும் இங்க இருக்கறதால ஒரு

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.