(Reading time: 14 - 28 minutes)
Priyamaanavale
Priyamaanavale

கோரினாள் தமிழ்செல்வி.

"சாரி உங்ககிட்ட கேட்காம நான் ஒரு டெசிஷன் எடுத்துட்டேன்" என்ன நடக்கிறது என தெரியாமல் குழம்பி கொண்டிருந்தவனுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக நடந்த எல்லாவற்றையும் இன்னுமே அவன் கிரகித்து கொண்டிருக்கவில்லை.

அவனின் அமைதியை கண்டவள் அவனுக்கு தன்னுடைய முடிவில் கோவமோ என எண்ணினாள்.

"நான் இப்போ வக்கீல் அங்கிள் கிட்ட போகணும். சாரி. நீங்க ரெஸ்ட் எடுங்க. வந்து பேசலாம்" என்றவள் அந்த அறையை விட்டு வெளியேற அங்கிருந்த மெத்தையில் அமர்ந்தான் ராம்.

மெல்ல நடந்ததை எல்லாம் மனதிற்குள் மீண்டும் ஒரு முறை ஓட்டி பார்த்தான்.

அவள், கலைவாணி அத்தையின் மகள் இல்லை. பிஎஸ்ஆர் குரூப்பின் வாரிசு. அப்படி என்றால் அவளுக்கும் அத்தைக்கும் என்ன சம்மந்தம்? அவள் ஏன் அவளுடைய அப்பாவை பிரிந்து இருந்தாள்? எதற்கும் அவனுக்கு விடை தெரியவில்லை. யாரிடம் கேட்பது? திருமணத்திற்கு முன் தன்னுடைய கடந்த காலத்தை பற்றி பேச வேண்டும் என்றாளே...அப்போது அதை தவிர்த்து விட்டான். இப்போது எப்படி அவளிடமே கேட்பது??? பாட்டியிடமோ அத்தையிடமோ கேட்க முடியாது... இத்தனை நாள் இது கூட தெரியாமல் இருந்திருக்கிறேன் என்று தெரிந்தால்??? யாரிடம் கேட்பது....யோசனையுடன் அந்த அறையின் குறுக்கும் நெடுக்குமாக நடந்தான்.

குழப்பத்துடன் அமர்ந்திருந்தவர் அங்கிருந்த டேபிளின் மேல் இருந்த தமிழ்செல்வியின் புகைப்படத்தை பார்த்தான். எழுந்து சென்று அதை கையில் எடுத்து பார்த்து கொண்டிருந்தவன் கதவு தட்டும் சத்தத்தில் திரும்பி வாயிலை பார்த்தான். ஒரு வயதான பெண்மணி கையில் பழச்சாறுடன் அந்த அறைக்கு வந்தார்.

"இந்தாங்க தம்பி..." நன்றி சொல்லிவிட்டு அவரிடம் இருந்து பழச்சாறை வாங்கி கொண்டவனையே அவர் பார்க்கவும், அதை உணர்ந்த ராம் "ஏதாவது சொல்லனுமா???" எனவும் "நீங்க தான் தமிழ் பாப்பாவுடைய வீட்டுக்காரர்னு கேள்விப்பட்டேன். ரொம்ப சந்தோஷம் தம்பி. நல்ல பொருத்தமான ஜோடி" அவர் முகத்தில் இருந்த சிரிப்பும் கண்களில் இருந்த பாசமும் அவருக்கு தமிழின் மேல் இருந்த பாசத்தை சொல்லாமல் சொன்னதை உணர்ந்த ராம் "நீங்க இங்க ரொம்ப வருஷமா வேலை செயிரிங்களா???" என்று கேட்டான்.

"கிட்டத்தட்ட முப்பது வருஷமா வேலை செய்றேன். தமிழ் பொறந்து வளர்ந்தது எல்லாம் கூடவே இருந்து பார்த்திருக்கேன். ரொம்ப நல்ல பொண்ணு. இவ்ளோ வசதி இருந்தும் யாரையும் மரியாதை இல்லாம பேசாது. யாரையும் குறை சொல்லாது. அய்யாவுக்கு ரெண்டு சம்சாரம். தனி தனியா இருந்தவங்க தமிழ்பாப்பாவோட அம்மா இறந்ததும் இங்கயே

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.