(Reading time: 8 - 15 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

வறண்டிருக்கிறது.

விவசாயம் தான் நம் நாட்டின் முதுலும்பு. விவசாயி சேற்றில் கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும். 

விவசாயத்தையே பிரதானமாக கொண்டிருக்கும் கிராமங்களில் வசிக்கும் விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான தண்ணீரும், நிதியுதவியும் இல்லாததால் இளைய தலைமுறைகள் வேறு தொழிலை நோக்கி நகரத்திற்கு சென்று விட்டனர். 

விவசாயத்தை மட்டுமே தொழிலாக கொண்ட மக்கள் இந்த கொடுமைகளை மேற்கொண்டு தாங்கமுடியாமல் உயிரை கூட துறந்து விடுகின்றனர். விவசாயத்தால் கிடைக்கும் தேசிய வருமானமும் குறைந்து விட்டது.

 விவசாயத்தின் மீதான முதலீடுகள் குறைந்து நலிவடைந்த தொழிலாக மாறிவிட்டது. இப்படியான சூழ்நிலையே தொடர்ந்தால் அடுத்த தலைமுறையினர் சோற்றை விடுத்து பர்கர், பீட்சா போன்றவற்றை மட்டுமே சாப்பிடமுடியும் குயிலி.

இந்த நிலை மாற வேண்டும் குயிலி... விவசாயிகள் கஷ்டபட்டு உழைக்கிறார்கள். அதன் பலனை அவர்கள் அனுபவிக்க வேண்டும். இனி விவசாயிகள் நஷ்டம் ஏற்பட்டது என்று சொல்லவே கூடாது. வறட்சி, மழை வெள்ளம் எல்லாவற்றையும் தாண்டி அவர்கள் வாழ வேண்டும். அதுவும் நிம்மதியாக வாழ வேண்டும். அதற்காக தான் நாங்கள் உழைக்கிறோம்.

நீயும் அதை தான் செய்ய வேண்டும். இதை எல்லாம் நினைவில் வைத்துக் கொள்.. இதை எல்லாரும் விரும்பவில்லை குயிலி. இது உன் வயதிற்குமீறிய விஷயம். ஆனால் உன் அறிவுக்கு மீறியது அல்ல. 

சூழ்நிலை இப்போது எல்லாம் எளிதாக இல்லை. அடுத்த நொடி என்ன நடக்கும் என்று  தெரியவில்லை. ஆனாலும் விவசாயிகள் வாழ வேண்டும். அதுதான் நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

உனக்கு குயிலி என்று ஏன் பெயர் வைத்தோம் தெரியுமா...

குயிலி ஆங்கிலேய கம்பனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் போராளி தான் வீரமங்கை குயிலி. சிவகங்கை சீமை சேர்ந்த பெண்போராளி.

ஆங்கிலேயர்களை எதிர்த்த வீரப்பெண்களில் வேலுநாச்சியாரும், குயிலியும் முக்கியமானவர்கள். அவர்களின் போர் தந்திரம், வீரம், விவேகம், சமூகநீதி, தாய்நாட்டுப்பற்று ஆகியவை நம் கண்முன் எப்போதும் நிற்க வேண்டும். 

ஒரு முறை நம்மை அழிக்க துடித்தவர்கள் ஆயுதங்களை குவித்து வைத்தனர். நவராத்திரி விழாவின் கடைசி நாளான விஜயதசமி தினத்தன்று சிவகங்கை அரண்மனைக்குள் ஆங்கிலேயர்கள் குவித்து வைத்திருந்த ஆயுதக் கிடங்குக்குள் குயிலி தன் உடல் முழுவதும்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.