(Reading time: 10 - 19 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

ஸ்மல் தான் ஜனனியை மிகவும் பாதித்தது. அவள் சாப்பிட்ட உணவு எல்லாம் வெளியே வந்துவிடுவது போல குமட்டிக்கொண்டு வந்தது. 

அவனை நினைக்கையில் பாவமாக இருந்தது. ஆனால் அந்த நிலையிலும் அவன் திட்டுவது அவளுக்கு எரிச்சலை ஊட்டியது. அவனை எட்டி உதைக்க வேண்டும் போல இருந்தது. ஆனால் ஏனோ அதை செய்ய தோணவில்லை. 

ஊரில் இருந்த வரை அவளை பார்த்து பேசவே பயப்படுவார்கள். ஜனனி என்றால் தெரிவதை விட ஆர் ஜே என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். ரவுடி ஜனனி என்பதை சுருக்கி ஆர்ஜே ஆக்கி விட்டார்கள்.அவளது இனிஷியலும் அது என்றதால் அவளும் உண்மையான காரணத்தை புரிந்து கொள்ளவில்லை.

 பழைய நினைவுகள் நியாபகம் வந்ததோடு தோழி சந்தியாவின்  அறிவுரையும் நினைவு வந்தது.

இது கிராமம் ஜனனி. ஆபத்து என்று ஒரு சத்தம் போட்டால் ஊரே கூடி விடும் . ஆனால் சென்னை அப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. முடிந்த வரை பிரச்சனையை விட்டு ஒதுங்கி இரு. புரிந்ததா... எப்போதும் நீ நன்றாக இருக்க வேண்டும் என்று நான் பிரார்த்தித்துக் கொண்டே இருப்பேன் என்று கட்டி அணைத்து முத்தமிட்டு தான் வழி அனுப்பி தான் இருந்தாள் சந்தியா.

அப்போதுதான் கவனித்தாள் அவனும் அதே போல ஒரு பிஎம்டபிள்யூ காரில் ஏறி போவதை. பணக்காரர்களே இப்படித்தான் இருப்பாங்க போல. பணம் இருந்தால் மட்டும் போதும் குணம் வேண்டாம் என்று... என்ன வாழ்க்கையோ என்று சலித்து கொண்டவளுக்கு ஒரு பழமொழி நினைவுக்கு வந்தது.

 தேவையில்லாமல் உதவி செய்யப் போய் நமக்கு இது தேவையா என்றவள் நேரமாவது உணர்ந்து அங்கிருந்து வேகமாக தன் அலுவலகத்தை நோக்கி நடந்தாள்

முதல் நாள் அலுவலகம் சென்றாலும் அவளுக்கு ஏனோ அங்கு தயக்கம் இல்லை. அவள் இன்டர்வியூகாக நேற்றைய தினம் வந்திருந்த போதே அவளது மேனேஜர் அவளிடம் இலகுவாக பழகியது அவளுக்கு நல்ல ஒரு மன நிலையை ஏற்படுத்தி இருந்தது.

 அதனால் நேரடியாக அவனைப் பார்த்து குட் மார்னிங் சொல்லி விட்டு தனக்கான வேலைகளையும் தனது இடத்தையும் தெரிந்து கொண்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

 எப்பொழுதும் ஆட்களிடம் இருந்து சற்று தள்ளியே இருப்பதால் அவளுக்காக ஒதுக்கப்பட்டிருந்த அந்த அறை அவளுக்கு மிகவும் வசதியாக இருந்தது.

 தேவைக்குப் போக பேசக்கூடாது என்ற மனநிலையில் இருப்பவள் ஜனனி. அதனால் அவள் பேசும் வார்த்தைகளை எண்ணி விடலாம். அவள் மனம் அளவில்லாமல் பேசுவது அவளது

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.