(Reading time: 6 - 12 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 17 - ஜெய்

தினைந்து நாட்களுக்கு  பின் தன் குடும்பத்தை மைத்தி சந்தித்தாள்... அரையிறுதி போட்டி சென்னையிலென்பதால் போட்டி நடப்பதற்கு இரு நாட்களுக்கு முன்பே சென்னை வந்திறங்கிவிட்டனர்....  போட்டி இன்னும் முடியாத காரணத்தால் மைத்தியும், துளசியும் தங்கள் அணியுடனேயே தங்கினர்...  மைத்தியின் பெற்றோரும் , துளசியின் பெற்றோரும் அவர்களை பார்க்க வந்திருந்தனர்...

“எப்படி இருக்க மைத்தி.... என்னடி இப்படி இளைச்சு போய்ட்ட... சாப்படறியா இல்லையா....”

“திரும்பின பக்கமெல்லாம் சப்பாத்திம்மா...  அதையே எத்தனை வாட்டி சாப்பிடறது... எப்படா பாட்டியோட அரிசி உப்மாவும், கொத்ஸும் சாப்பிடுவேன்னு இருக்கு....”

“நீ பேசினது மட்டும் கற்பகம் பாட்டிக்கு தெரிஞ்சது, இதுக்குத்தான் உன்னை போவேண்டாம்ன்னு சொன்னேன்... கேக்கலைன்னு ஆரம்பிச்சுடுவா....”

“ஆமாம்மா... நீயும் சொல்லிடாத... ஏம்மா மாதுவ கூட்டிண்டு வரலை...”

“எத்தனை பேர் பாக்க வரலாம்ன்னு தெரியலைடி... அதுதான் கூட்டிண்டு வரலை...  எல்லாருக்கும் உன்னை வந்து  பார்க்கணும்ன்னு ஆசை...  நீ உன்னோட கோச் கிட்ட கேளேன்.... நாளைக்கு எல்லாரையும் கூட்டிண்டு வரேன்....”

“சரிம்மா கேட்டு சொல்றேன்....”

“மைத்திம்மா பிடிக்கறதோ, பிடிக்கலையோ நன்னா சாபிடும்மா... அப்போதான் விளையாட தெம்பு இருக்கும்....”

“சாப்டுண்டுதான் இருக்கேன்ப்பா... என்ன இருந்தாலும் நம்ம சாப்பாடு மாதிரி வருமா.... ஆத்துக்கு வந்த அன்னைக்கு பாட்டி கையால வத்தக்குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிடணும் கூடவே கொட்டு ரசமும், பருப்புத் தொகையலும்....”

“மைத்திக்கா இப்போ அப்படியே மாயாபஜார் படத்துல வர்ற அந்த கடோத்கஜன் மாதிரியே இருக்க....”, துளசி சொல்ல அனைவரும் சிரித்தார்கள்...

துளசியின் தந்தை சென்று அவர்கள் பயிற்சியாளரிடம் கேட்க, நிறைய பேரை அனுமதிக்க முடியாது ஆனால் அவர்கள் அனைவரும் போட்டியை பார்க்க வரலாம்.... அதற்கு டிக்கெட்டிற்கு ஏற்பாடு செய்ய முடியும் என்று கூற... மைத்தியின் பெற்றோர் அவளிடம் விடை பெற்று கிளம்பினர்....

போட்டி ஞாயிறன்று நடைபெறுவதால் காமாட்சி பாட்டி தவிர சுப்பிரமணியம் தாத்தாவின் மொத்த குடும்பமும் ஆஜர்... அதே போல் துளசியின் குடும்பமும்...

டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பாட்டிங்கை தேர்வு செய்தது.... தமிழக அணி மைதானத்திற்குள் பில்டிங் செய்ய நுழைய தன் மொத்த குடும்பத்தையும் ஸ்டான்டில் பார்த்த

9 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.