(Reading time: 6 - 12 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

துளசியும், மைத்தியும் ஆனந்தம் அடைந்தார்கள்... தாத்தாவும், பாட்டியும் வந்திருந்தது மைத்திக்கு கூடுதல் மகிழ்ச்சி... தான் விளையாடும் ஆட்டத்தை ஒரு முறை பார்த்துவிட்டால் அதன் பிறகு அவர்களிடமிருந்து தடை வராதென்பது அவளின் ஆழமான நம்பிக்கை....

டெல்லி அணி தேர்வு போட்டியில் தமிழக அணியுடன் விளையாடி வென்றதால் சற்று மிதப்புடனே களமிறங்கினர்...   முதலில் பந்து வீசிய வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து ஆடினார்.... பத்து ஓவர்களில் ஐம்பது ரன்கள் விக்கெட் இழப்பின்றி எடுத்திருந்தனர்....  பதினொன்றாவது ஓவரில் மைத்தி பந்து வீச வந்தாள்....

மைத்தி போடும் பந்தை அவர்களால் கணிக்கவே ஒரு ஓவர் தேவைப்பட்டது....  பந்தை எதிகொல்வதே அவர்களுக்கு சவாலாக இருந்தது... maidan ஓவர்.... அடுத்த மைத்தியின் ஓவரில் இரண்டு விக்கெட் விழுந்தது...  மைத்தியின் ஐந்தாவது ஓவரில் அடுத்த விக்கெட்... இப்படியாக மைத்தி வீசிய பத்து ஓவரில் வெறும் பதினைந்து ரன்கள் மட்டுமே கொடுத்து ஆறு விக்கெட்டுகள்  வீழ்த்தி இருந்தாள்... டெல்லி அணி எட்டு விக்கெட்டுகளை இழந்து நூற்றி முப்பது ரன்கள் எடுத்தது...

மைத்தியின் பந்து வீச்சை கண்ட அவளின் குடும்பத்திற்கு அத்தனை மகிழ்ச்சி... அதுவும் வர்ணனையாளர் ஒவ்வொரு முறை அவளை பற்றி புகழ்ந்து கூறும்போதும் அவர்கள் முகத்தில் அத்தனை பெருமிதம்... 

அடுத்து ஆடிய தமிழக அணி துளசி மற்றும் ராதிகாவின்  அபார ஆட்டத்தால் முப்பது ஓவர்களிலேயே  வெற்றி பெற்றுவிட்டனர்...  மைத்தி ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டாள்...

கூத்தபிரான் அவர்கள்தான் வர்ணனையாளர்...  மைத்தியிடம் சில வார்த்தைகள் பேச சொன்னார்....  தனது  பயிற்சியாளருக்கும், தன் டீம் மெம்பெர்களுக்கும் நன்றியைத் தெரிவித்த மைத்தி தன்னை இந்த அளவு முன்னேற ஊக்குவித்த தன் குடும்பத்தாருக்கு பிரத்யேக நன்றிகளை கூறினாள்....

“நீ இதுக்கு முன்னாடி என்னை சந்திச்சு இருக்க நியாபகம் இருக்கா...”

“உங்களை மறக்க முடியுமா வானொலி அண்ணா...  நான் சென்னை வானொலி நிலையத்துல சிறுவர் பூங்கால பேசினேன்....  அதை நீங்கதானே தொகுத்து வழங்கினீங்க....”

“என்னோட நினைவுலையும் நீ அழுத்தமா பதிஞ்சிருக்க...  முதன் முறை ஒரு சிறுமி கிரிக்கெட்தான் என் எதிர்காலம்ன்னு பேசினதை எப்பவும் மறக்க மாட்டேன்.... ரொம்ப சந்தோஷமா இருக்கும்மா... நீ உன்னோட கனவை அடைஞ்சதுக்கு.... மேலும் மேலும் நல்ல முறையில் விளையாடி இந்திய அணிக்கு தேர்வு பெற வாழ்த்துக்கள்...”, என்று கூற மைத்தி

9 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.