(Reading time: 9 - 18 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

தொடர்கதை - உள்ளம் கொள்ளை போகுதே... - 05 - ஜெபமலர்

ரு சில நிமிடங்கள் கழித்துதான் உணர்வுக்கு வந்தவள் தன்னை பிடித்திருப்பது ஒரு ஆண் என்பதை அறிந்து வேகவேகமாக சுதாரித்து கொண்டு நகர்ந்து நின்றாள்.

சாரி என்று அவனிடம் இருந்து விலகிக் கொண்டு முகத்தை பார்த்தவள் அதிர்ந்து விட்டாள். இது அந்த போதைக்காரன் ஆச்சே என்று மனதுக்குள் யோசித்தவள் கடந்த இரு முறையும் செய்யாத தவறுக்காக அவனிடம் வாங்கிய திட்டுகளை நினைத்துக்கொண்டு இப்போ அவன் என்னதான் சொல்லி திட்டப் போகிறானோ என்று தன்னைத்தானே நொந்து கொண்டாள்.

இந்த மண்டபத்தில் இருந்து வெளியே வருகிறாள் என்றால் அஸ்வித் அல்லது ஸ்வீனாவுக்கு தெரிந்தவள் ஆகத்தான் இருக்க வேண்டும் என்று எண்ணியவன் அவளை திட்டாமல் பார்த்து போக தெரியாதா என்றான். இவ்வளவு கவனக்குறைவாகவா இருப்பாய் என்று ஒருமையில் பேச அவளுக்கு முகம் சுருங்கியது. ஏதோ திட்டாமலாவது விட்டானே என்று நினைத்தவள் பதில் ஏதும் சொல்லாமல் அங்கிருந்து கிளம்ப முயற்சி செய்தாள்.

ஆனால் அவள் நேரமோ என்னமோ அந்த நேரத்தில் டிராபிக் அதிகமாக இருந்தது. அதனால் அவள் அந்த இடத்திலேயே நிற்க வேண்டியதாகி போயிற்று. அவள் முகம் சுருங்கியது பார்த்ததும் அவனுக்கு மனதில் ஏதோ நினைவுக்கு வர அவள் முகமும் நினைவு வர அந்த நாளை நினைத்து பார்த்தான்.

அவனுக்கு முதல் நாள் நினைவிற்கு வரவில்லை. ஆனால் அவள் காரில் இடித்தது நினைவிற்கு வந்தது.   ஒரு வேளை இவள் என் ஆபிஸில் தான் வேலை செய்கிறாளா...

இங்கே இந்த பங்ஷனுக்கு வந்து இருக்கிறாள் என்றால் இவள் நிச்சயமாக ஆபீஸில் தான் வேலை செய்கிறாள்.இல்லை என்றால் ஸ்வீனாவிடம்  பழகி இருக்க முடியாது. அப்படி என்றால் இவள் திட்டமிட்டுதான் ஏதோ காய் நகர்த்துகிறாள் போல ...இவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத் தான் இருக்க வேண்டும்.. எதற்கும் இவளை பற்றி விசாரிக்க வேண்டும் என்று எண்ணியவன் அப்பொழுதுதான் அவளை நன்கு கவனித்தான்.

அன்று பார்த்த பொழுது புடவையில் சாதாரணமாக தெரிந்தவள் இன்று அந்தச சுடியில் மிக அழகாக தெரிந்தாள்.

ஒருவேளை ஃபேரிடேல் கதையில் கேள்விப்பட்ட பெண் இப்படித்தான் இருப்பாளோ என்று என்ன தோன்றியது அவனுக்கு... அவள் பெயரை அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அஸ்விட் கிட்ட கேட்க முடியும் என்று  எண்ணியவன் ஹலோ ஃபேரி (fairy) உன் நேம் என்ன என்றான் அவன்.

திரும்பி பார்த்தவள் அவனைப் பார்த்து முறைத்து விட்டு வேகமாக சென்று விட்டாள்.

15 comments

• [quote name="AdharvJo"][quote name="Jebamalar"]Intha story a best ah ezhutha mudiumnu namburen[/quote] you are on line with polishing ur skills epi by epi series by series jeba ma'am 💐💐💐 There is a uniqueness is every series of urs and ur satisfaction level is what making you to write back to back :dance: keep rocking.[/quote]
I totally agree!
• [quote name="Jebamalar"]நீங்கள் தருகிற அன்பான ஆதரவு தான் என்னை எழுத வைக்கிறது. எல் கே ஜி லெவலில் இருக்கும் என் முயற்சியை பாராட்டும் தங்கள் அன்பு என்னை மகிழ வைக்கிறது. மிக்க நன்றி.. கணக்கு தான் அங்கிள்... சிந்தனை சிற்பி அழகான அர்த்தமுள்ள மிக உயர்ந்த வர்ணனை... நிச்சயம் இன்னும் அழகான சி² ஆக முயற்சி செய்கிறேன். Thank you so much uncle[/quote]
இந்தப் பணிவுதான் தங்களை உச்சத்துக்கு அழைக்கிறது!
• [quote name="Jebamalar"]Intha story a best ah ezhutha mudiumnu namburen[/quote] you are on line with polishing ur skills epi by epi series by series jeba ma'am 💐💐💐 There is a uniqueness is every series of urs and ur satisfaction level is what making you to write back to back :dance: keep rocking.
• Jo.... Enai thita koodathunu previous epi la soliten... Neenga correct ah guess seithinga... Rompa happy... Chumma vilaiyatuku than ilanu sonen...nenga genius aache .. Raghav madriye thoonutho ...sekiram different therium . Thank you so much Jo... Unga comment parthi enoda story a niraiya time correct panten. Thank you so much dear Adharv... Intha story a best ah ezhutha mudiumnu namburen.. Thank you Jo..
• நீங்கள் தருகிற அன்பான ஆதரவு தான் என்னை எழுத வைக்கிறது. எல் கே ஜி லெவலில் இருக்கும் என் முயற்சியை பாராட்டும் தங்கள் அன்பு என்னை மகிழ வைக்கிறது. மிக்க நன்றி.. கணக்கு தான் அங்கிள்... சிந்தனை சிற்பி அழகான அர்த்தமுள்ள மிக உயர்ந்த வர்ணனை... நிச்சயம் இன்னும் அழகான சி² ஆக முயற்சி செய்கிறேன். Thank you so much uncle
• Win kitta pesa poradhu jana illa dhana 😝 but idhu bongattam, jeba ma'am 😈😈 :yes: naa sonnadhu illaye illaye solli attam potinga thane ippo ena solluringa ippo ena solluringab :dance: :dance:

Thanu semma smart 😍 but what avanga mummy kk ena anadhu?? Andha first epi la vara andha lady BMW yaru :Q:
Jana, Raghav oda bro nu ninaikuren....same to same steam baby k theridhu kuda ivarukk theriyalaiye 😉
Pk2 decent ah irukku expansion paah pavam bodhai karana ah 😂😂😂😂 Interesting and cute update ma'am 👏👏👏👏👏👏 rendu perum orutharai oruthar nalave gauge panuranga pa 😉😉 look forward to see what happens next.
Thank you.
• Dear Jeba! எந்தெந்த கேரக்டரைப்பற்றி எழுதறீங்களோ, அந்தந்த கேரக்டராகவே மாறி சிந்திக்கிறீங்க! கூடவே, தங்கள் நகைச்சுவை உணர்வும் சேரவே, படிப்பவருக்கு போதை தருகிறது. தன்னை மறந்து கதைக்குள் சென்றுவிடுகிறான். ஆமாம், நீங்கள் கணக்கு வாத்தியாரா, கெமிஸ்ட்ரியா? உங்களுக்கு ஒரு ஸ்கொயர்ட் போட யோசிக்கிறேன், ஆங், சி ஸ்கொயர்ட்! 'சிந்தனைச் சிற்பி'! ஓகேயா?

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.