(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

தொடர்கதை - கனவு மெய்ப்படும் – 18 - ஜெய்

ரண்டு நாட்களில் லண்டனுக்கு கிளம்ப உள்ளதால் தனக்கு வேண்டியதை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மைத்தி....

“ஏண்டி கோந்தே.... எல்லாத்தையும் சரியா எடுத்து வச்சுண்டயா...   சுவாமி படம் வச்சுக்க சொன்னேனே.... மறக்காம வச்சுடு....”

“அம்மா நேக்கும், பாட்டிக்கும் உன்னோட ஸ்பெஷல் காப்பி தாம்மா....”, அடுப்படியில் வேலையாக இருந்த சியாமளாவிடம் கூறியபடியே காமாட்சி பாட்டி அருகில் வந்து அமர்ந்தாள் மைத்தி....

“அஞ்சு நிமிஷம் பொறுடி...  பருப்பு பொடிக்கு வறுத்துட்டு காப்பி போடறேன்....”

“சுவாமி படம்தான்  பாட்டி மொதல்ல வச்சேன்...  லிஸ்ட் எழுதி வச்சிருக்கேன் பாட்டி... அதை பார்த்துத்தான் எடுத்து வைக்கறேன்... இன்னும் மாத்திரை அப்பறம் சில சாமான் மட்டும் வாங்கணும்.... அதையும் அடுக்கிட்டா பாக்கிங் ஓவர்.... அப்பா ஆபீஸ்லேர்ந்து  வந்தவுடனே போலாம்ன்னு கார்த்தால சொல்லிட்டு போனா....”

“மைத்திம்மா மொதல் முறையா அத்தனை தூர தேசம் போற.... தெரிஞ்சவா கூட யாரும் இல்லை... நேக்கு கவலையா இருக்கு.... வேளைக்கு ஒழுங்கா சாப்பிடு...   தனியா எங்கயும் போகாத.... உன்னோட விளையாடற பொண்கள் எல்லாம் எங்க இருக்காளோ அங்கேயே இரு.... துளசியையும் தனியா விடாத.... தமிழ் தெரிஞ்சவா நீங்க ரெண்டு பேர்தானே... அதனால சேர்ந்தே இருங்கோ... அவள் இன்னுமே குழந்தை... நீதான் அவளையும் சேர்த்து பார்த்துக்கணும்....”

“கவலையே படாத பாட்டி... நான் நல்லபடியா போயிட்டு  வந்துடுவேன்....  கூட வர்றவா எல்லாரையுமே ரஞ்சி மேட்ச் விளையாடும்போது பார்த்து இருக்கேன்....  ஓரளவு தெரிஞ்சவாதான்.....  டெல்லில  ரெண்டு நாள் இருப்போமே.... அப்போ பழகிக்க வேண்டியதுதான்....”

“டெல்லில ரகுவை பார்ப்பியோடி...”

“நாங்க தங்கப் போற இடத்தை அண்ணாக்கிட்ட சொல்லி இருக்கேன் பாட்டி.... வரேன்னுதான் சொன்னான்...  நான் வெளில போ முடியாது....”

“நீ தனியாலாம் போ வேண்டாம்... அவனே வருவான்....  நம்மாத்துலேர்ந்து ஏரோப்ளேன்ல போற முதல் ஆள் நீதாண்டி... நேக்கு ரொம்ப பெருமையா இருக்கு... நோக்கு பயம்லாம் இல்லையே....”

“ஏரோப்ளேன்ல போறது எப்படி இருக்கும்ன்னு தெரிஞ்சாத்தானே பாட்டி பயம்லாம் வரும்... இப்போதைக்கு வெளிநாடு போற சந்தோஷம் மட்டும்தான் இருக்கு....”

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.