(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

அனைவரும் கிளம்பி வீடு வந்து சேர்ந்தார்கள்.....

வீட்டிற்கு வந்து அவரின்  நிலையை வீட்டிலிருக்கும் அனைவருக்கும் விளக்கி தங்கள் பகுதிக்கு சென்றார்கள்...

“சாமளா இது என்னடி இப்படி ஒரு  போறாத வேளை...  அனந்துவை பார்த்தியா... ஏதானும் பேசினானா....”, காமாட்சி அழுதபடியே சியாமளாவை கேட்டாள்....

“இல்லைம்மா நாளைக்கு வரைக்கும் அவரை மயக்கத்துலதான் வச்சிருப்பாளாம்....  ஒரு ரெண்டு நிமிஷம்தான் உள்ள நிக்க விட்டா... அதுக்கூட தள்ளி நின்னுதான் பார்த்துட்டு வந்தேன்...  அங்க இன்னும் ரெண்டு பெட்ல பேஷன்ட் இருந்தா... அதனால ரொம்ப நேரம் இருக்க விடலை....”

“ஹ்ம்ம் நான் முண்டக்கண்ணி அம்மனுக்கு வேண்டிண்டு இருக்கேன்.... ஒண்ணும் இருக்காது... சீக்கிரம் சரியாய்ட்டு  வந்துடுவான்... நீயும் குளிச்சுட்டு வந்து நம்மளோட குல தெய்வத்துக்கு மஞ்சத் துணில காசு  முடிஞ்சு வை...  தெய்வம் காப்பாத்தி கொடுக்கும்....”, காமாட்சி சொல்ல அதன்படியே செய்தாள் சியாமளா...

“ஏண்டி சாமளா...  நீ சொல்றதை எல்லாம் கேக்கறச்ச ரொம்ப செலவாகும் போல இருக்கே... பணம் இருக்கா..,.”

“மைத்தி ஊருக்கு கிளம்பறாளே... சாமான் ஏதானும் வாங்க வேண்டி இருக்குமேன்னு ரெண்டு நாள் முன்னாடிதான் பேங்க்லேர்ந்து ரெண்டாயிரம் ரூபாய் எடுத்து வச்சார்... அது தற்சமயத்துக்கு இருக்கு... நாளைக்கு டாக்டர் சொல்றதை பார்த்துண்டுதான் பணத்துக்கு ஏற்பாடு பண்ணனும்மா....”

“ஹ்ம்ம் என்கிட்ட சேர்த்து வச்சது ஒரு ஐநூறு ரூபாய் இருக்கு... அதையும் வாங்கிக்கோ ...”

“நீங்க வச்சுக்கோங்கோம்மா... தேவைப்பட்டா வாங்கிக்கறேன்...”

“சரி நீ போய் படு...  காலைல சீக்கிரம் கிளம்பணுமே.... குழந்தைகள் பத்தி கவலைப்படாத.. நான் பார்த்துக்கறேன்...”, காமாட்சி சொல்ல, பெரிய அளவில் எந்த பிரச்சனையும் இருக்கக்கூடாது  என்று வேண்டியபடியே படுக்க சென்றாள் சியாமளா.... 

மறுநாள் சியாமளாவும் அவளின் அண்ணன்களும் மருத்துவமனை சென்றனர்... அனந்து அதே நிலையிலேயே இருந்தார்...  

மதியம் வரை மாற்றி மாற்றி அவருக்கு பல சோதனைகள் செய்யப்பட்டன...

இரண்டு மணிக்கு பெரிய மருத்துவர் அழைப்பதாக கூறி நர்ஸ் இவர்களை அழைத்து சென்றார்....

“அவருக்கு எல்லா டெஸ்ட்டும் எடுத்து பார்த்துட்டோம்... தலைல ரெண்டு இடத்துல கல் ஆழமா குத்தி இருக்கு... அதனால உள்ள மூளைக்கு போற நரம்பு ஏதாவது பாதிக்கப்பட்டிருக்கா

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.