(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

கொடுத்தாலும்  ஆச்சர்யப் படறத்துக்கில்லை ....”, இவர்கள் பேசுவதை கேட்டபடியே வந்த மாது கிண்டலடித்தான்....   கூடவே அவளின் மாமாக்களின் பிள்ளைகளும் வர அங்கே கலாட்டா களைகட்டியது... இதுவரை யாரும் அவர்கள் வீட்டில் தமிழ்நாட்டை விட்டு தாண்டியதில்லை... முதன்முதலில் ரகு டெல்லி வரை சென்றான்.... இப்பொழுது மைத்தி வெளிநாட்டிற்கே செல்லப்போகிறாள்... அனைவருக்குமே அதில்  சற்று  பெருமை...

சியாமளா காப்பி கலந்து வர அனைவரும் பருகியபடியே அரட்டையை தொடர்ந்தனர்....   மைத்தியை இளையவர்கள் அனைவரும் சேர்ந்து ஓட்டித் தள்ளினர்....

இவர்கள் இங்கு பேசிக்கொண்டிருக்க பக்கத்து வீட்டிலிருக்கும் மாமா பதறியபடியே வந்தார்...

 “சியாமளா அனந்துவோட ஆபீஸ்ல கூட வேலை பார்க்கறவர் போன் பண்ணினார்... அனந்துக்கு ஆக்ஸிடென்ட்  ஆயிடுத்தாம்.... GHல சேர்த்திருக்காளாம்.... உடனே புறப்பட்டு வர சொன்னார்....”

“ஐயோ மாமா, என்ன சொல்றேள்... என்னாச்சாம்... எங்க அடி பட்டிருக்கு....  இப்போ எப்படி இருக்கார்....”

“அவர் விவரம் ஒண்ணும் சொல்லலை சியாமளா... உடனே வாங்கோ... அவசரம்ன்னு சொல்லி வச்சுட்டார்.....”, அவர் கூற அழுதபடியே சியாமளா கிளம்பினாள்...

கற்பகம் பாட்டி கீழே சென்று தன் மகன்களை அழைத்து வர... சியாமளாவும் அவள் அண்ணன்களும் ஆட்டோவில் GH நோக்கி சென்றனர்...

இவர்கள் GH அடைந்து அங்கிருக்கும் ஜனத்திரளில் தள்ளாடி, எங்கு செல்வதென்று தெரியாது திண்டாடி, பல பேரிடம் விசாரித்து ஒரு வழியாக அவசர சிகிச்சை பிரிவை அடைந்தனர்....

அங்கு ரிசெப்ஷன் அருகில் சென்று அனந்துவின் பெயரை சொல்லி விசாரிக்க, அவர்களை பார்த்து விட்டு அனந்துவின் அலுவலக நண்பர் அருகில் வந்தார்.... 

“என்னாச்சு ரமேஷ்...   அனந்து எங்க... எப்படி அடிப்பட்டது....”, இரண்டாவது அண்ணன் அவரின் நண்பரிடம் கேட்டார்....

“பஸ்ல படிக்கட்டுல நின்னுட்டு இருந்தார்... கூட்ட நெரிசல்...  கூட்டம் தள்ளின தள்ளுல  பஸ் ஓடிட்டு இருக்கும்போது கீழ விழுந்துட்டார்....  கை, கால், தலை எல்லாம் நல்ல அடி...  நல்ல வேளை பக்கத்துல ஸ்டாப் வந்ததால பஸ் மெதுவா வந்துச்சு... இல்லை அவர் விழுந்த வேகத்துக்கு உயிர் போயிருக்கும்...  உடனே ஆம்புலன்ஸ் வச்சு இங்க கூட்டிட்டு வந்துட்டோம்...  நல்ல வேளை இன்னைக்கு நாங்க நாலைஞ்சு பேர் ஒண்ணா வந்தோம்.... சுரேந்தர் சார்க்கிட்ட உங்க நம்பர் இருந்துது... அதுதான்  உடனே தகவல் கொடுக்க முடிந்தது...”

ரமேஷ் சொல்ல அனைவரும் அவரை அதிர்ந்து பார்த்திருந்தார்கள்.... சியாமளாவின் கண்ணிலிருந்து கண்ணீர் நிற்கவில்லை...  

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.