(Reading time: 11 - 21 minutes)
Kanavu Meippadum
Kanavu Meippadum

பாட்டியும், பேத்தியும் பேசியபடி இருக்க கற்பகம் பாட்டி பேத்தியை பார்க்க மேலே வந்தார்....

“என்ன பாட்டியும், பேத்தியும் மும்முரமா பேசிண்டு இருக்கேள்....”

“ஊருக்கு போறதுக்கு எல்லாம் எடுத்து வச்சாசான்னு கேட்டுண்டு இருந்தா பாட்டி....”

“ஆமாண்டி நானே அதுக்குத்தான் வந்தேன்.... அம்மா பருப்பு பொடியும், தேங்காப்பொடியும்  உனக்கு பண்றேன்னு சொன்னா... நான் கொஞ்சமா புளிக்காச்சல் பண்ணியிருக்கேன்... இதையும் சேர்த்து எடுத்து வச்சுக்கோ... நல்ல கெட்டியாத்தான் பண்ணியிருக்கேன்... வெளில வழியாது... நன்னா ரெண்டு, மூணு பிளாஸ்டிக் கவர் சுத்தி இருக்கேன்... பயப்படாம வச்சுக்கோ...  இகுக்கும் தனியா வச்சிருக்கேன்....”

“பாட்டி அம்மாக்கிட்டயே இதெல்லாம் வேண்டாம்ன்னு சொன்னேன்,,, சாப்பாடு ஐட்டம் எல்லாம்  விடுவாளான்னு தெரியலை....  அதுவும் இல்லாம எங்களுக்கு டயட் சாப்பாடுதான் பாட்டி....  அவா கொடுக்கறதுதான் சாப்பிட முடியும்....”

“இதென்னடி அநியாயமா இருக்கு... அவா கொடுக்கறது உனக்கு பிடிக்கண்டாமோ... என்னவோ போ... எதுக்கும் நீ எடுத்து வச்சுக்கோ... கூடாதுன்னு சொன்னா அப்பறம் பார்த்துக்கலாம்...”

“சரி பாட்டி... கண்டிப்பா எடுத்துக்கறேன்....”

“மைத்தி இத்தனை நாள் நீ ஜெய்ச்சத்து பெரிசில்லை....  ஆனா இப்போ விளையாடப் போற எல்லா போட்டியையும் கண்டிப்பா ஜெய்க்கணும்....”

“அது என்ன பாட்டி... இத்தனை நாள் இல்லாம இப்போ மட்டும் இப்படி சொல்ற... எப்பவுமே  தோத்தாலும், ஜெய்ச்சாலும்  ஒரே மாதிரி எடுத்துக்கோன்னுதானே சொல்லுவ....”

“ஆமாண்டி அது எல்லாம் நீ இந்தியாக்கு உள்ளயே விளையாடினே... எல்லாரும் நம்மவா... ஆனா இப்போ விளையாடப் போறது யாரோட... நம்ம நாட்டை அடிமையா நடத்தினவாளோட... அவாளை கண்டிப்பா தோக்கடிக்கணும்....  என்னோட தாத்தா, அப்பால்லாம் சுதந்திரப் போராட்டத்துல கலந்துண்டவா... பிரிட்டிஷ்காராக்கிட்ட எத்தனை கஷ்டப்பட்டுருக்கா தெரியுமா....  அதுக்கு அவாளை பழிக்கு பழி வாங்கவேண்டாமோ....”, கற்பகம் பாட்டி சொல்ல, மைத்தியும், காமாட்சியும் சிரித்தனர்....

“கவலையே படாத பாட்டி...  நாங்க போய் இறங்கறதே  லண்டன்லதான்... அங்கதான் ராணி இருக்கா... நேராவே போய் எங்க கொள்ளுத்தாத்தாவையும், எள்ளுத்தாத்தாவையும் எப்படி கஷ்டப்படுத்தலாம்ன்னு சண்டை போட்டுட்டு வரேன்...”

“பாட்டி மைத்தி பேச ஆரம்பிச்சா  பக்கிங்ஹாம் அரண்மணைல இருக்கற மொத்த பேரும் சேர்ந்து பேசினாக் கூட சமாளிக்க முடியாது.... மைத்தி பேசற பேச்சுக்கு இனிமே எந்த ஜென்மத்துலயும் எந்த நாட்டையும் அடிமைப் படுத்த மாட்டோம்ன்னு சாசனம் எழுதி

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.