அப்பா நியூ ப்ராஜெக்ட் லான்ச் பண்ணியாச்சு. சக்சஸ் ஆகி இருக்கு. அதான் ரிலாக்ஸா ஒரு பத்து நாள் அமெரிக்கா போய்விட்டு வரலாம் என்று நினைத்தேன்.
ஓ... நல்ல விஷயம் தான். ஆனால் கூட கொஞ்ச நாள் கழித்து செல்லலாம் ராகவ்.
ஏன் அப்பா ஏதாவது வேலை இருக்கிறதா...
வேலை என்று சொல்ல முடியாது. ஆனால் நான் அமெரிக்கா செல்ல வேண்டியதிருக்கிறது. அப்பொழுது நீயும் என்னுடன் வந்தால் நன்றாக இருக்கும் என்று யோசிக்கிறேன்.
அப்படியா அப்பா... எப்போது செல்ல வேண்டும். நான் உங்களுக்கும் சேர்த்து விமானத்தில் டிக்கெட் புக் செய்கிறேன்.
நாம் எப்பொழுதும் விமானத்தில் தானே செல்கிறோம். இந்த ஒருமுறை கப்பலில் செல்லலாம் என்று நினைக்கிறேன். எனக்கு ஒரு சிறிய வேலை இருக்கிறது. அது முடிந்ததும் செல்லலாம். என்றைக்கு செல்ல வேண்டும் என்று சொல்லுகிறேன். நாம் சேர்ந்து சொல்லலாம். உனக்கும் இந்த பயணம் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று சொல்ல ஓகே அப்பா நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். எப்பொழுது செல்ல வேண்டும் என்று நீங்களே சொல்லுங்கள். நாம் சேர்ந்தே செல்லலாம் என்றான் அவன்.
புஷ்பா பிரதாபன் இருவரும் தங்களுக்குள் ஒரு மர்மப் புன்னகை யை பரிமாறிக்கொண்டனர்.
அப்பா அப்படி என்றால் மும்பைக்கு செல்ல வேண்டியிருக்குமே என்றான்.
ஆமா ராகவ்... நாம் கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னதாக மும்பைக்கு சென்று விடலாம். அங்கு உன் சித்தப்பா சத்யா இருக்கிறான் அல்லவா. அவன் வீட்டில் தங்கி விட்டு அங்கிருந்து நாம் அமெரிக்காவிற்கு கப்பல் பயணத்தை தொடங்கலாம். அதற்குள்ளாக நீ வேறு ஏதாவது காரியங்கள் இருந்தால் முடித்து விடு என்றார்.
ஓகே என்றவன் அவர்களுடன் சேர்ந்து வீட்டிற்குள் நடந்தான். தனக்கு ஒரு முக்கியமான வேலை இருப்பதாக பிரதாபன் சென்றுவிட புஷ்பாவும் தன் அறைக்குள் சென்றாள்.
பிரதாபன் வெளியே சென்று விட்டதையும் புஷ்பா அறைக்கு சென்றதையும் பார்த்தான் ராமு. டீ கோப்பையை எடுத்துக் கொண்டு ராகவ்விடம் வந்தான்.
ராகவ் தம்பி... நான் உங்களிடம் ஒரு முக்கியமான விஷயம் பற்றி பேச வேண்டும் என்றான்.
சொல்லுங்க ராமு...
தம்பி... அந்த பொண்ண பத்தி தான் பேசவேண்டும். கொஞ்சம் கோபம் இல்லாமல் நான் சொல்லுவதை கேளுங்கள்.
அவளைப்பற்றியா... அவளைப் பற்றி பேசுவதற்கு எதுவுமில்லை. வேறு ஏதாவது இருந்தால் பேசுங்கள். இல்லையென்றால் எனக்கு நிறைய வேலை இருக்கிறது .