போகும் கதை ஏற்கனவே எழுதப்பட்டு விட்டது
ரேச்சல் இரவு முழுவதும் யோசித்து ஒரு முடிவிற்கு வந்திருந்தாள். நேராக ஜெமியிடம் சென்றாள்.
"ஜெமி… குட்மார்னிங்"
"குட்மார்னிங் ரேச்சல்."
"உங்கிட்ட ஒரு உதவி கேட்கணும்."
"சொல்லு… என்னால் முடிஞ்சதை செய்றேன்."
"என்னையும் அம்மாவையும் யூஎஸ்ஸுக்கு கூட்டிட்டு போயிடறியா?"
"வொய்… எதுக்காக இப்படி பேசற?" அதிர்ச்சியுடன் கேட்டான்.
"இங்கே இருக்கவே எனக்கு பிடிக்கவில்லை. இந்த ஊரை விட்டு வேறு எங்காவது போகணும் நினைக்கிறேன். நாகர்கோவிலுக்கு போகவும் எனக்கு இஷ்டமில்லை. இந்த இடத்தை விட்டு ரொம்ப ரொம்ப தூரத்துக்கு நான் போயிடனும். நினைத்தால் கூட இங்கே நான் வரக்கூடாது" என்று திணறியபடி சொன்னாள்.
"யாரோ கெட் லாஸ்ட் என்று சொன்ன மாதிரி பேசுறியே. இந்த இடத்தில் அப்படி என்ன பிரச்சனை இருக்கு?"
"சில பேரோட மூஞ்சியை பார்க்கவே வேண்டாம்... அவங்களை பத்தி நினைக்க வேண்டாம்... அவங்க குரலை கேட்கவே கூடாது... அப்படினு நினைக்கறேன். ஆனால் திரும்பத் திரும்ப பார்க்கிற மாதிரி ஆயிடுது. என்னால தவிர்க்க முடியலை" என்று சொன்னாள்.
"மனு குட்டியை பார்க்காமல் இருக்க முடியலையா?அல்லது சத்யன் எதுவும் திட்டிட்டாரா.... அவர்கிட்ட ஏதும் பிரச்சனையா? ". என்று கேட்டான்.
"மனுவை பாக்காம இருக்கிறது எனக்கு கஷ்டமாதான் இருக்கு. என்னமோ நானே பெத்த பொண்ணு மாதிரியே ஒரு அட்டாச்மெண்ட் அவ கிட்டே இருக்கு. அவள் குரலைக் கேட்காமல் என்னால இருக்க முடியல. அவளை இறுக்கி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கணும். என் பக்கத்தில் அவ இருக்கணும். அப்படினு ஏங்கிட்டு இருக்கேன். ஆனால் அவளை பார்க்காமல் இருக்கறதுதான் நல்லது என்றும் தோன்றுகிறது." அழும் குரலில் பேசினாள்.
"மனுவை பார்க்க போய் சத்யன்ட்ட திட்டு வாங்கிட்டியா…"
"இல்லை… உங்கிட்ட எப்படி சொல்றதுனு தெரியலை… மனு எனக்கு பிரச்சினை இல்லை. இப்ப சொன்னாலும் நந்தினி அவளை இங்கே அனுப்பிடுவாங்க…"
"அப்புறம் என்ன சிக்கல்… நாட்டை விட்டே போயிடணும்னு சொல்லிட்டு இருக்க."
"ம்… ஏன் அப்படி சொல்றேன்னா.. சத்யன்…. ஆங்.. .நீ அம்மாட்ட இதை பற்றி சொல்ல கூடாது. ப்ராமிஸ்…"
Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.
Marupadium muttikitanagala ha ha
Jemiii un pakathula tan sathiyan irukan
Valliur la enna kidaikuma
Waitling to read
indha epi padikumbodhu yaravdhu oruthar avdhu Racheal Meera yen irukakudhadhunu yosichi hunting start panamatangalanu ethirparthwn
Thank you.