Page 3 of 5
ராகுல் என்ற பெயர் இருவரையுமே பேசியது யார் என்று பார்க்க வைத்தது.
கூட்டம் அலை மோதிக் கொண்டு இருந்தாலும் ராகுலை அவர்களால் சுலபமாக அடையாளம் காண முடிந்தது.
“குடும்பமே இங்கே தான் இருக்காங்க” – சக்தி தொலைவில் இருந்த கலைவாணி, ப்ரியம்வதாவை சுட்டிக் காட்டினாள். அவர்கள் பக்கத்தில் ராகுல் மட்டுமில்லாமல் ஜீன்ஸ் அணிந்த இன்னுமொரு அழகிய இளைஞன் ஒருவனும் இருந்தான்.
...
This story is now available on Chillzee KiMo.
...
சரியா இருக்கும். சீக்கிரம் போய் பாடிட்டு வாங்க. நாங்களும் கேட்டு ரசிக்குறோம்”
சரியாக அதே நேரம் ப்ரியம்வதாவின் பெயரை மைக்கில் அழைத்தார்கள்.
“ப்ரியா போ” – கலைவாணி வற்புறுத்தினாள்.