(Reading time: 7 - 13 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தொடர்கதை - இதோ ஒரு காதல் கதை - பாகம் 2 – 02 - பூர்ணிமா செண்பகமூர்த்தி

வர் என்னை ரொம்ப விரும்புறாராம்!”

என்னடி சொல்ற?

ஆமா! ரத்தத்தில் “ஐ லவ் யூ!னு எழுதி இருந்தது!

அடப்பாவி !

அந்தப் பாவியே தான். அவன் என்னை லவ் பண்றானாம். நானும் அவனை லவ் பண்றேனான்னு கேட்டான்?

நீ என்னடி சொன்ன?

இல்லைன்னு சொல்லிட்டு என் கிளாஸுக்கு ஓடியே போயிட்டேன்.

ஒய்! நீ அவனைக் கரக்ட் பண்ணத்தான் இப்படிக் கண்ணை அடிக்கிற கலர்ல ட்ரெஸ் பண்ணிட்டு போனியா? இது தெரியாம டெய்லி காலைல உன்னை பஸ் ஸ்டாப்ல பார்த்துத்  பின்னலுக்குப் பூ வேற வச்சு அனுப்பிவச்சுட்டு இருந்திருக்கேன்.

சத்யா என்னடி நீயே கிண்டல் பண்ற. அவன் என்னை லவ் பண்றான்னு சத்தியமா எனக்குத் தெரியாது. அவன் கீதாவைப் பார்க்கத் தான் தினமும் வர்றான்னு நினைச்சுட்டு இருந்தேன்.

சும்மா ரீல் விடாத ரம்மி. லவ் பண்ற பையன் பார்க்கிறது யாருக்குத் தெரியுதோ இல்லையோ, அந்தப் பொண்ணுக்குத் தான் பர்ஸ்ட் தெரியும்ன்னு சொல்லுவாங்க. அப்போ உனக்குத் தானே முதல்ல தெரிஞ்சிருக்கும். இருந்தும் பெஸ்ட் பிரண்ட் என்கிட்டே மறைச்சிட்டே பார்த்தியா? சத்யா சொல்லவும், அவளை அடிக்கக் கை ஓங்கினாள் ரம்யா.

சத்யா, நீ கூட என்னை நம்ப மாட்டேங்கற பாரு!

ரம்மி, நான் உன்னை நம்புறேன். ஆனால் உன் வயசை நம்பல!

என்ன சினிமால வர்ற  அப்பாவோட டயலாக்கை சொல்லிட்டு இருக்க?

சத்யாவின் அம்மா குரல் கேட்டது. ரம்யா, ரகு உன்னைத் தேடிட்டு வந்திருக்கான். வீட்டுக்குக் கூட்டிட்டு போறதுக்கு.

இந்த அம்மா எப்பவும் இப்படித்தாண்டி! என்னைக் கொஞ்ச நேரம் காணோம்னா இவனை அனுப்பி வச்சிருவாங்க!

வயசுப்பொண்ணை வச்சிருக்க எல்லா அம்மாவும் அப்படித் தான் இருப்பாங்க. கண்டதை யோசிச்சிட்டு இருக்காமல்,ஒழுங்கா எக்ஸாம் எல்லாத்தையும் நல்லபடியா எழுதணும்னு நினைச்சிட்டுப் படி

பை சத்யா ! வரேன்! ரம்யா வீடு வந்து சேர்ந்ததும், அம்மா அவளிடம் , புக்ஸ் வாங்க இவ்ளோ நேரமா? என்று கேட்க, இல்லைமா, கொஞ்ச நேரம் சேர்ந்து கிராமர் பார்த்துட்டு இருந்தோம். அவளுக்கும்  இங்கிலீஷ் இந்த செமெஸ்டர் இருக்கே! என்றாள்.

4 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.