(Reading time: 7 - 13 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

நல்லா கிராமர் பார்த்தீங்க! சரி வா சாப்பிடு! நேரமாச்சு! அம்மா சொல்ல.

எனக்குப் பசிக்கலம்மா, என்று சொல்லிவிட்டுத் தூங்கச் சென்றுவிட்டாள்.

புரண்டு புரண்டு படுத்த ரம்யாவிற்குத் தூக்கமே வரவில்லை. என்னிடம் போய் காதலைச் சொல்ல அவனுக்கு ஏன் தோன்றியது? இது வரை அவனை உற்று கவனித்தது கூட கிடையாது. சம்பந்தமே இல்லாமல் நம்மிடம் வந்து லவ் லெட்டர் கொடுத்துட்டான். ஒரு வேளை எதாவது குழப்பத்தில் வேற யாரிடமோ கொடுக்க வேண்டியதை என்னிடம் கொடுத்து விட்டானா? பலவாறு  யோசித்துக் கொண்டே இருந்தாள்.

பரீட்சைகள் தொடங்கின. படிப்பின் மும்முரத்தில் இருந்தாலும், தொலைபேசி மணியோசையை மிகவும் எதிர்பார்க்கத் தொடங்கினாள் ரம்யா. ஊரிலிருந்து வந்திருந்த அக்காவிடம்,  மேத்ஸ் சம்பந்தமான சந்தேகங்கள் கேட்டுக் கொண்டு இருந்தாள். சில நேரத்தில் அவள் சரியாக பாடத்தில் கவனத்தில் இல்லாத மாதிரியே அக்காவிற்குத் தோன்றவும், “ரம்யா? என்ன பிரச்சனை? சரியாவே கவனிக்க மாட்டேங்குற! இந்த கால்குலஸ் ப்ராப்ளம் எத்தனை தடவை சொல்லித் தந்துட்டேன், திரும்பத் திரும்ப புரியாத மாதிரியே இருக்கிற? என்ன குழப்பம்?”

“அப்படிலாம் ஒண்ணுமில்லக்கா! போன் அடிச்ச மாதிரி இருந்ததுல்ல!”

“அதெல்லாம் இல்லையே! எல்லாருக்கும் வீட்டில் போன் கனெக்ஷன் புதிதாக எடுத்த பொழுதில் தான் போன் அடிச்சிட்டே இருக்கிற மாதிரி தோணும்! உங்க வீட்ல தான் ரொம்ப நாளா போன் இருக்கே! அப்புறம் ஏன் உனக்குத் தோணுது?” யாராச்சும் போன் பண்ணனும்னு வெயிட் பண்றியா?

இல்லைக்கா!

சரி! சரி ! கணக்கைக் கவனி!

மீதிப்பாடம் எப்படியோ சென்றது.

ஏற்கனவே வகுப்பிலேயே பாடங்கள் நன்கு புரிந்து இருந்ததால், எல்லா பரீட்சைகளும் அவளுக்கு எளிதாய் தோன்றியது. கல்லூரி ஆடிட்டோரியத்தில் தான் தேர்வுகள் நடந்தன. முதலாம் ஆண்டு மாணவர்கள் அனைவரும் ஒரே ஹாலில் எழுதினார்கள். தினேஷ் அவளுக்குப் பின் வரிசையில் தான் அமர்ந்து பரீட்சை எழுதினான். அவன் எப்படி எழுதினான் என்று ரம்யாவுக்குத் தெரியாது. ஆனால் அவள் நன்றாகத் தான் எழுதிக் கொண்டு இருந்தாள்.

20 December 2002                             

இன்னும் ஒரே ஒரு பரீட்சை பாக்கி இருந்தது. இன்ஜினியரிங் மெக்கானிக்ஸ் தான் அது. கொஞ்சம் கடினமான பாடம். ரம்யா லேப் ஒர்க்கில் எப்படியோ செய்து சமாளித்து விட்டாள். தியரி பேப்பர் என்றாலும் முழுவதும் ப்ராப்ளம் சால்விங் தான். ஒரு கணக்கில்  ஏதேனும் சிறு

4 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.