அப்பிடியே சிக்ஸருக்கு ட்ரை பண்ணலாமா?
"உங்களுக்காக எங்களுடைய கார்மென்ட் கம்பெனியில பெரிய பதவி காத்திட்டு இருக்கு ரேச்சல்…"
"என்னவொரு ஆஃபர்… சத்யன் சார்… இந்த வாயாடி… சண்டைகார பொண்ணுங்களுக்கெல்லாம் உங்க கம்பெனியில சேர்ற தகுதி இருக்கா"
இதுவும் அவன் சொன்னதுதான்… முகத்தில் இருந்த புன்னகை ஓடிவிடாமல் காத்தபடி...
"வேலைக்குரிய திறமை இருந்தால் போதும். மத்ததெல்லாம் அடிஷனல்தான். " அமர்த்தலாக சொன்னான்.
"ஆஹாங்… என்னோட இந்த அடிஷனல் குவாலிஃபிகேஷன்ஸ் ரொம்பவும் தேவைப்படுதுபோல… மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி."
அதாவது அவனும் சண்டைகாரன்… வாய் பேசறவனாம்…
"அடடா… நீங்கள் மிஸ்டர். மகேஸ்வரனை புகழ்ந்து சொன்னதை கேட்டால் அவர் மிகவும் மகிழ்ச்சி அடைவார்."
"அவரா உங்க கம்பெனியோட எம்டி?.. போன வருஷமே…" என்று ஆரம்பித்தவள் சட்டென நிறுத்தினாள்.
மாட்டினியா… போன வருஷ கதை ரேச்சலுக்கு எப்படி தெரியுமாம்? சத்யன்கிட்டேவா ட்ராமா போட்ற… அவன் உதட்டு ஓரத்தில் சிரிப்பை நிறுத்தி...
"போன வருஷமே... என்ன நடந்துச்சு?" என்று கொக்கி போட்டான். போன வருடம்தான் சத்யனை எம்டியாக மகேஸ்வரன் அமர்த்தினார். அடுத்தடுத்து சிக்கல்கள் வந்ததால் எம்டியாக சத்யன் மாறியதை அதிகாரபூர்வமாக வெளி உலகிற்கு இன்னும் தெரிவிக்கவில்லை…
இதுபற்றி ஒரு வார்த்தை சொன்னாலும் தங்க மீன் சிக்கிடும்… சத்யனா கொக்கா… ஒரே நாள்ல உன்னுடைய டிராமாவுக்கு என்ட் கார்டு போட்டாச்சும்மா…
என்ன சொல்வதென்று ரேச்சல் தடுமாற… சத்யன் அடுத்த கிங் மூவிற்காக காத்திருக்க…
அச்சோடா… அவனுடைய சமீபத்திய செய்வினை ஒன்று "அத்தான்" என்று கத்திக் கொண்டு நடுஹாலில் வந்து குதித்தது.
தனூ…..!
அவ்… இவள் ஏன் இங்கு இப்போது வந்தாள்.? ரேச்சலை பார்த்துக் கொண்டே.. அவன் அருகில் நெருக்கமாக உரிமையாக அமர்ந்தாள்.
"என் செல்லம் மனு எங்கே அத்தான்?. "
ரேச்சலின் பார்வை வீச்சு அவனை தந்தூரி அடுப்பில் கருகி கொண்டு இருக்கும் சிக்கன் போலாக்கியது… ஒரு நொடியில் இந்த தனு க்ளைமாக்ஸை மாற்றி விட்டாளே… சத்யன் நொந்து