தலைவி பேச வருவதற்குள் முதலில் மைத்தி மீது குற்றம் சாற்றிய பெண் மீண்டும், “கோச் அந்த மாதிரி சொன்ன போல தெரியலை... ஏன்னா அந்த பொண்ணு சிரிச்சுட்டுத்தான் நடந்து வந்தா....”
“இல்லை கோச் நிஜமா அவ எங்கப்பாக்கு உடம்பு மோசமா இருக்குன்னுதான் சொன்னா... அதை எப்படி சிரிச்சுண்டு சொல்லி இருப்பா....”
“இல்லை கோச்... நான் நல்லா கவனிச்சேன்.... அந்த பொண்ணு சிரிச்சுட்டுத்தான் சொன்னா.... அதுக்கு மைத்தி தலை வேற ஆட்டினா...”, விவகாரம் தீவிரமாக மைத்திக்கு எதிராக போவதை உணர்ந்த தலைவி இடையிட்டாள்...
“மைத்தி உன்கிட்ட அவ என்ன சொன்னா அதை ஒரு வார்த்தை மாத்தாம அப்படியே சொல்லு...”
“எங்கப்பாவோட நிலைமை கவலைக்கிடமா இருக்குன்னு சொல்லிட்டு, அவ விளையாட போய்ட்டா.... இன்னைக்கு எங்கப்பாக்கு ஒரு மேஜர் ஆபரேஷன் நடக்கறது... அதுல அவருக்கு ஏதாவது ஆயிடுத்தான்னு தெரியலை....”, இன்னும் எதிரணி இவளை வைத்து விளையாடியதை அறியாது அது உண்மை என்று நம்பி பேதையாக பேசினாள் மைத்தி...
“மைத்தி நீ சொல்றது ஏதாவது நம்புற மாதிரி இருக்கா... உனக்கு ஏதாவது மெசேஜ் வந்தா அது எனக்குதான் முதல்ல தெரிஞ்சிருக்கணும்... ஆனா எனக்கு அப்படி எந்த விஷயமும் வரலை... அப்பறம் எப்படி அந்த பொண்ணு எப்படி அப்படி சொல்லி இருக்கும்...”
பயிற்சியாளர் கூறிய பொழுதுதான் மைத்திக்கு மெதுவாக தன்னை மாட்ட வைத்த சதி வலை புரிந்தது.... அவள் பேந்த பேந்த முழித்தபடியே பயிற்சியாளரையும், தலைவியையும் பார்த்தாள்...
தலைவிக்கு மைத்தியை பார்க்க பாவமாக இருந்தது.... பயிற்சியாளருக்கும் அவளின் அறியாத்தன்மையில் பரிதாபம் தோன்றியது...
“மைத்தி இந்த மாதிரி விஷயங்கள் நீ நிறைய பார்ப்ப... உன்னை உசுப்பேத்தி அதனால உன்னோட பந்து வீச்சை குலைக்க பல விதமா எதிரணி முயற்சி பண்ணுவாங்க... இது உனக்குன்னு இல்லை... ஏன் மட்டையடிக்கறவங்களுக்கும் இது போல் நடக்க வாய்ப்பிருக்கு... ரன் எடுக்க ஓடும்போது கூட ஏதாவது சொல்லி உங்களை கோவப்படுத்தலாம்... அதை எதையும் நீங்க காதுல வாங்காம இருக்கணும்...”
“கோச் நான் பண்ணின தப்பு புரியறது... என்னால டீம் தோத்து போச்சு... என்னை எல்லாரும் மன்னிச்சுடுங்க... எங்க பாட்டி சொல்லி இருக்கா... தப்பு பண்ணினா அதுக்குண்டான தண்டனை அனுபவிக்கனும்ன்னு.... அதனால நான் பண்ணின தப்புக்கு என்ன தண்டனை எனக்கு