(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 01 - தனுசஜ்ஜீ

சூரியபகவான் தன்னுடைய செங்கதிர்களை பூமியில் செலுத்தி ஆதிக்கம் செய்ய தயாராக இருந்த விடியலில்,

கிராமம் என்றும் சொல்லமுடியாத நகரம் என்றும் சொல்ல முடியாத, அந்த ஊர் திருநெல்வேலி அருகே உள்ளது.

பெண்கள் தங்களுக்கே உரிய காலைவேளை பரபரப்புடன் இயங்கி கொண்டிருந்தனர். பால், நியூஸ்பேப்பர் போன்றவை அந்த ஏரியாவில் வலம் வர, அனைவரது வீட்டு வாசலிலும் மாக்கோலம் போட்டுக்கொண்டும், சிலர் போடுவதற்கு தயாராக இருந்து கொண்டும் இருக்க,

அந்த பெரிய வீட்டு வாசலில் கையில் தன் கிழிந்த பாவாடையின் கிழிந்த பாகத்தை பிடித்துக்கொண்டு, இரண்டு ஜடையில் ஒரு ஜடை அவிழ்ந்து இன்னொரு ஜடையின் ரிப்பன் அவிழ்ந்து வெறும் காலுடன் கண்ணில் நீர் வழிய நின்று கொண்டிருந்தால், அந்த ஏழு வயது சிறுமி.

பெரிய வீட்டின் மருமகள் மங்களம் துடைப்பத்தை எடுத்துக்கொண்டு வெளியே வர, அங்கு அந்த சிறுமியை கண்டு பதறி,

'என்னாச்சு கண்ணு யாரு வேணு' சிறுமி அழுதுகொண்டே அப்பெண்ணை கண்டு மிரள,

மங்களம் துடைப்பத்தை கீழே வைத்துவிட்டு சிறுமி அருகில் வந்து, அங்கு இருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர வைத்துவிட்டு,

'பசிக்குதா கண்ணு' என்று கேட்க, சிறுமி இல்லை என்பதை போல தலையாட்ட,

'பொறவு என்ன வேணு கண்ணு' என்று பரிவுடன் கேட்க, அதில் அந்த சிறுமி சற்று தெளிந்து, 'அம்மா பெரிய வீட்டு அத்தைக்கிட்ட அம்மாக்கு உடம்பு முடில சொல்ல சொன்னாங்க' நா நடந்து வரப்ப நாய் என்ன கடிக்க வந்துச்சு ஓடி இங்க வந்துட்டே என்று தேம்பிக் கொண்டே கூற,

சரி கண்ணு அழுவாத, அம்மா எங்கன இருக்காங்க.

வீட்டுல.....

அம்மா பேரு என்ன????

அமுதாம்மா.....

அதில் அதிர்ச்சியாகிய மங்களம் அமுதாவா.....

அம்மாக்கு என்னடா ஆச்சு, வா கண்ணு வூட்டுக்கு போவோம் என்று கையோடு அழைத்துச் சென்றார்.

சிறுமி வீட்டிற்கு செல்லும் வழியினை காட்டிக்கொண்டே செல்ல, அது ஒரு பெரிய பாறை அந்த பாறைக்கு அருகில் ஒரு நைந்த குடிசை வீடு.

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.