(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

அதன் உள்ளே சென்றால், ஒரே அறை அதில் ஒரு விரகு அடுப்பு அதில் இரண்டு பாத்திரம். ஒரு இரும்பு பெட்டி அதில் உள்ள துணிகள் உள்ளேயும் வெளியேயும் சிதறி கிடக்க, அதன் அருகில் நோயாளியான அமுதா உயிருக்கு போராடிய நிலையில் படுத்திருந்தார்.

இதனை கண்ட மங்களம் கண்ணில் நீருடன் அம்மு என்று கேவி கொண்டே வர .....

அதில் அமுதாவின் கண்கள் திறந்து அதில் சிறு வெளிச்சம் பரவியது.

தன்னுடைய ஆருயிர் தோழியை பத்து வருடம் கழித்து இப்படியா பார்க்க வேண்டும் என்று கண்ணில் வழிந்த நீருடன் அவளது கையினைப் பிடித்துக்கொண்டு கதறி அழுக..........

அம்முவும் தன்னுடைய நிலையெண்ணி கண்ணில் நீர்வடிய....

இதனைக் கண்ட அந்த சிறுமி மிரண்டு அழுதுகொண்டே அவள் அன்னை அருகில் வந்து, ஏம்மா அழுகுற என்று அழுதுகொண்டே கேட்க,

சிறுமியின் கண்ணீரினை கண்ட இருவரும் தங்களது கண்களை துடைத்துக்கொள்ள..........

மங்களம் சிறுமியை மடியில் அமர வைத்து அழுககூடாது கண்ணு சரியா....அம்மாக்கு உடம்பு முடியலல அதுனாலதான் அழுகுறாங்க.....

சிறுமி ஏதோ புரிந்ததுபோல் தலையினை மட்டும் ஆட்ட.....

இவ்ளோ வருஷம் கழிச்சி உன்ன இப்புடி பார்க்குறதுக்குதான் நான் காத்திருந்தேனாடி அம்மு... என்று நடுங்கிய குரலில் கூற.....

அமுதா சிரிக்க முயற்சி செய்து கண்ணில் நீருடன் எப்புடி இருக்க மங்க.....

எனக்கென்னடி நீ குடுத்தது தானடி இந்த வாழ்க்கையே!!!!

நான் எப்பவோ செஞ்ச ஒத்தாசய மறக்காம இன்னு மனசுல வச்சிருக்கியா புள்ள.......

எப்புடிடி மறக்க முடியும் மறக்குற மாறி ஒத்தாசயா நீ எனக்கு செஞ்சிட்டு போன.....

அத வுடு புள்ள எனக்கு ரே ஒரு உதவி பண்ணுறியா புள்ள.....திக்கி திணறி முதா கூற.....

என்னா புள்ள இப்புடி லா பேசுற வா உன்ன டவுன் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போறே(ன்). என்னான்னு பாத்துப்புடுவோ(ம்) புள்ள கூறிக் கொண்டு கையை புடிக்க ......

கையை விலக்கிவிட்டு ந......நான்... பொலக்கமாட்டே புள்ள என் விதி முடிஞ்சி போச்சு..

.தேனு இங்க வா.....

சிறுமி மங்கையின் மடியிலிருந்து தன் அன்னையின் அருகில் அமர.......

உயிரை கையில் பிடித்துக் கொண்டு, தன் மகளின் தலையினை ஆசையுடன் வருடி.....'மங்க என்ன நினைச்சு வெசனபடாத புள்ள னக்கு ஆம்பள புள்ள பொறந்திருந்தா கூட நிம்மதியா போவேனே....அந்த ஆண்டவன் ஒத்த புள்ள அதுவும் பொட்டபுள்ளயா குடுத்துட்டு போய்டான் ங்க....ஏ தங்கத்த மட்டும் அனாத ஆசுரமம் ஏதுனா சேர்த்து பாத்துகிடு புள்ள.

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.