(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

ஓ உனக்கு தெரிஞ்சு போச்சா........

டேய் மச்சான் உன் கூடவே இருந்தாவேண்டா நீ பண்ற எல்லாமே எனக்கு தெரியும். உனக்குள்ள காதல் வந்து ரொம்ப நாளாச்சு அதை நீ உணராமல் லூசு மாதிரி அவளை தேடிட்டு இருக்கேன்னும் எனக்கு தெரியும்டா.......அப்போ உனக்கும் தெரிஞ்சு போச்சாநா..... டேய் மச்சி அத நீயும் உணர்ந்துட்டியா...... என்று அவன் சந்தோஷத்தோடு கார்த்திகை தூக்கி சுற்ற.....

டேய் பக்கி தல சுத்துது கீழே இறக்கி விடு டா......சொல்றத முழுசா கேட்டுட்டு அதுக்கு அப்புறம் சந்தோஷபடுடா.....

கார்த்திக் சொன்னதைக் கேட்டு யோசனையுடன் அவனைக் கீழே இறக்கிவிட தேனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு டா

வாட்.......

வாத்து இல்லை கோழியும் இல்லை அவளுக்கு கல்யாணம் முடிஞ்சு போச்சு.....

எப்படிடா.....

எப்படின்னா.....என்ன சொல்றது மச்சான்.....

நீ ஒழுங்கா பாத்தியாடா நீ எதை வச்சு சொல்ற அவளுக்கு கல்யாணம் ஆயிடுச்சுனு.

அவ கழுத்துல தாலி இருந்துச்சு இதைவிட பெரிய சாட்சி வேணுமா....

கதிரின் உற்சாகம் முழுவதும் வடிய ....

சரி விடு மச்சான் வா நீ சாப்டியா.....

உனக்கு கஷ்டமாவே இல்லயாடா......

நாங்க என்ன ரெண்டு பேரும் உயிருக்குறாவா லவ் பண்ணோம் ஏதோ அவள பார்த்து மன்னிப்பு கேக்கனும் தேடுனே ...... அவள பத்தியே நினைச்சது நாள ஒரு அட்ராக்ஷன் அவ்ளோதான். இப்ப அவளுக்கு மேரேஜ் ஆயிடுச்சி இனி நாம வேலைய மட்டும் பார்க்குறது நல்லது. இனி இந்த விஷயத்த பத்தி என்கிட்ட பேசாத கதிர்.

ஓகே லவ் வேணா அட்லீஸ்ட் நீ யாருன்ற உண்மையாவுது சொல்லலாமே.......

சொல்லலாம் பட் அதுக்கு இப்ப அவசியம் இல்ல.....

அவன் மனதில் எந்த அளவு வலி உள்ளது என்பதை கதிரால் உணர முடிந்தது. அமைதியாக அவனும் வண்டியினை எடுக்க....

ஒய் உன் வண்டி அங்க இருக்கு.....

அது எங்களுக்கு தெரியும் நீ வண்டில ஏறு......

நா நல்லதா இருக்கே.....டோன்ட் ட்ரீட் லைக் சைல்ட் ஒகே.....

மூடிட்டு ஏறுடா இந்த பீட்டர் கொஞ்சம் ஸ்டாப் பண்ணு.

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.