(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தேனு பயந்துகொண்டே வீட்டுக்குள் நுழைய போக, ஏய்…….. என்று அதட்டலுடன் கையில் வைத்திருந்த தடியால் ஒரு அடி வைக்க......

அம்மா ...........என்ற அலறலுடன் சிறுமி வில…..

அப்பொழுது தான் வேலைக்கு வந்த சிவகாமி, அசோ என்னாச்சு கண்ணு என்று தூக்க வர......

கையில் வைத்திருந்த தடியை எடுத்து மூகாம்பிகை வீச அது சிவகாமியின் கையை தாக்கியது.

வூட்டு வேலைக்கு வந்தா அந்த சோழிய மட்டும் பாருல..... பெருசா வந்துட்டா.... கிழ விழுந்தவளுக்கு எந்திரிக்க தெரியாதோ.....

இன்னும் இங்கு இருந்தால் தன்னால் சிறுமிக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்ற அச்சத்தில் பின் கட்டு நோக்கி வேகா எட்டுக்களை போட்டால் சிவகாமி.

மூகாம்பிகை சிறுமியை நோக்கி, இங்கேரு சின்ன சிறுக்கி வூட்டுல கால வச்ச வெட்டிப்போடுவே ஜாக்கிரதை..... பின் கட்டு பக்கமாதா போகோணு வரோனு ......புரியுதா....

அந்த சிறுபெண் மிரண்ட விழியுடன் தலையாட்ட .....

வாயில என்ன புள்ள வச்சி கிடக்க வாய தொறந்து சொல்லுதிய எல்லா கம்பெடுகட்டுமா......

சிறுமி நடுங்கி கொண்டே சரி ஆச்சி... என்று கூற

அங்கு வந்த வெங்கடாசலம் ஏ ஆத்தா பச்ச புள்ளய மிரட்டிக்கிட்டு இருக்கவ....பாரு புள்ள எப்புடி நடுங்குது.

தேனு நீ அந்த பக்கமா போ கண்ணு....

மூகாம்பிகை 'ஆமா நடுங்குறா போடா கூறு கெட்டவனே வீட்டில் சேர்த்து பார்த்துட்டு நான் உசுரோட இருக்கேனே நீ இப்படி தான் பேசுவ'

என்ன ஆத்தா இந்த வார்த்தை சொல்லி புட்ட நான் ஒன்னும் கேட்கல விடு என்று கூறிவிட்டு வீட்டின் உள் கட்டுக்குள் சென்றார்.

வயலில் வரப்பு வெட்டிவிட்டு அப்பொழுதுதான் வந்தார் வந்தவுடன் தாயை சங்கடம் ஆகி விட்டோமே என்று கவலையுடன் துண்டை தோளில் போட்டு விட்டு அமர,

தூங்கும் தன் மகனைப் பார்த்து தலையை கோதி விட்டார்.

மங்களம், வெளியில் நடந்த சம்பாஷணையை அவரும் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

ஏய்யா வெசனப்பட்டு நிற்க, என்று மங்கலம் அவர் தலையை கோத, வுடு நாம நல்லது தான் பண்ணனும் ஆத்தா பழையகாலத்து ளு அப்படித்தான் இருப்பாக

ம்ம்.... சரிதா புள்ள ஆனா ஒரு நா(ள்) கே. இந்த வார்த்தை சொல்லி புடுச்சே. எத்த காலம் இந்த புள்ளய நாம வச்சிகிடது புள்ள. அந்த புள்ளயும் பாவம் தான.

அவளும் இதைதான் சிந்தித்துக் கொண்டிருந்தார். அந்த கடவுள் எதுனா நல்ல வழி காட்டும்

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.