(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

பெரிய வீட்டில், அடுத்த நாள் காலை

வெங்கடாசலம் தன் அன்னை மூகாம்பிகை இடம் சென்று விவரத்தைக் கூற.....

என்ன வெங்கடேசு பேசுதே நீ வேத்தாலு புள்ளய கூட்டிகிட்டு வாரியா....... கூறுருக்கால ஒனக்கு. எப்பேர்பட்ட குடும்பம் நம்முடையது குடும்ப மானத்தை வாங்குறதுக்கு நீயும் உன் பொஞ்சாதியும் அழையுறீளோ..... முடியவே முடியாது அம்புடுதே நா சொல்லுவே...

ஆத்தா கொஞ்சம் ஒசன பண்ணி சொல்லாத்தா....பாவம்ல அந்த பச்சபுள்ளயு தனியா எப்புடியாத்தா வுட முடியு.....

அதுக்குனு ஊர்ல உள்ள குடும்பத்த பாத்துபுட்டு நிக்கிதீகளோ... நீயும் உன் பொஞ்சாதியும் ....

ஆத்தா......

வேணுனா நாளைக்கு டவுனுக்கு போய் ஆசரமத்துல வுட்டு புட்டு உன் சோழிய பாருல.....

என் பொஞ்சாதி அடம்புடிக்கிறாத்தா கொஞ்சம் மனசு வையாத்தா....

எப்பொழுதும்தான் கூறியதும் கேட்கும் மகன் இவ்வளவு இறங்கி பேசுவதை தாங்கமுடியாமல், யோசித்துவிட்டு,

சரிய்யா அந்த சின்ன சிருக்கிய வூட்டுவேலைக்காரவுக தங்குற அறைக்குள் இருக்க சொல்லு... படிப்பு செலவு - லா நாம பண்ண முடியாது. வேணுனா மூனு வேளையும் சோறு போடுதே வூட்டுவேலைய பார்க்க சொல்லிப்புடு என்று முதியவள் இரக்கமே இல்லாமல் முடிவாக கூறிவிட.....

தன் அன்னை இந்தளவு இறங்கிவந்ததே பெரிது என்று நினைத்துக்கொண்டு, சரியாத்தா.......என் பொஞ்சாதிட்ட விஷயத்த சொல்லி புட்டு வந்துடுதே....கூலி காரவுகளுக்கு கூலி குடுத்து புடு ஆத்தா...

சரிய்யா.......

ஏ புள்ள மங்க கொஞ்சம் வெளிய வருதீயா....

என்னங்க உள்ள வரலாமுள்ள.....

ரவால புள்ள.....

ஆத்தாகிட்ட பேசுதீகளா....

ஆத்தாகிட்ட பேசி புட்டே புள்ள, ஆத்தா வேலைக்காரவுக தங்குற அறைக்குள்ள தங்கிக்க சொன்னாக, பொறவு படிப்பு செலவு- லா பாக்க முடியாது சொல்லி புட்டாக..... வேணுனா மூனு வேல சோறு போடுதாகளா நம்ம வூட்டு வேலை பண்ண சொன்னாக புள்ள.....

என்ன மனுசன் நீரு பச்ச புள்ளய போய் வீட்டு வேல பாக்க சொல்லுதீக....

ஏ புள்ள அப்புடி நா வுட்டு புடுவேனா, ஆத்தா அப்புடி சொல்லுச்சி புள்ள, இந்த அளவு அது

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.