(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

என்ன புள்ள சொல்றவ ..... இந்த புள்ளயையும் கூட்டிகிட்டு வாரியா....

என்னங்க இப்படி சொல்லி புட்டீங்க..... என் அம்முவோட புள்ளய தனியா விட சொல்றீங்களா...அதுவும் பொட்ட புள்ளைய ....

வெங்கடாச்சலம் சிறிது யோசனையுடன்......

சரி புள்ள ஒரு மூணு நா(ள்) விளக்கேத்தி புட்டு வா..... டவுன்ல எதுனா நல்ல ஆசிரமத்துல இடம் பார்க்க சொல்லுதே......இந்த பிள்ளைய சேத்து புடுவோம் சரியா மங்க....

என்னங்க......

என்ன மங்க.......

ஏனுங்க தேன நம்ம கூடவே வச்சிகிடலாம்ங்க.....

புரிஞ்சுதா பேசுதியா .......அம்மா என்ன சொல்லு புள்ள...... வேத்து சாதி புள்ளய எப்புடி சேத்துகிடுவாக......

எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. நா தேன தனியாக வுடமாட்டேன் ஏ கூடவே தான் வச்சுகிடுவேன்.

இப்படியே இருவரும் வாக்குவாதம் செய்து கொண்டிருக்க அருகில் இருந்த 9 வயது சிறுவன் இருவரின் வாக்குவாதத்தை கண்டு மிரள.....அதை கண்ட வெங்கடாச்சலம் கொஞ்சம் சன்னமாக பேசு புள்ள பைய மிரளுறா பாரு....

இப்ப என்னதான் என்ன பண்ண சொல்றீங்க என்று அவள் ஆதங்கத்துடன் கேட்க......

அவருக்கு தன் மனைவி தன்னிடம் எதற்கும் இப்படி வாக்குவாதம் செய்ததில்லை. அவள் தோழியின் மேல் எவ்வளவு உயிர் வைத்திருந்தாள் என்று அவரும் அறிந்த ஒன்றே.

இந்த குட்டிய பாத்தாலும் பாவமாதா இருக்குது.ஆனா இந்த விஷயத்த வூட்டுல சொன்னா...... வூட்டையே ரெண்டு பண்ணிபுடுமே ஆத்தா..... என்று மனதிற்குள்ளே அவர் போராடிக் கொண்டிருக்க....

இறுதியில் ஒரு முடிவெடுத்தவராய்....... சரி புள்ள அந்த புள்ளைய கூட்டிட்டு வா......ஆத்தா கிட்ட நான் பேசிகிடுதே......

ஆனா ஆத்தா எதுனா இந்த குட்டிய சொல்லிக்கிட்டே இருக்குமே புள்ள ........ நா இருந்தா பார்த்துக்கிடுவே...... நா வயக்காட்டுக்கு போனப்புறம் என்ன பண்ணுவ மங்க.....ஒன்னயையே ஆத்தா அந்த பேச்சு பேசு இந்த சின்ன குட்டி பாவமுல மங்க.......என்று அவர் மிகுந்த வருத்தத்துடன் கூற.........

மங்கை மனதில் சிறு மன நிம்மதியுடன்...... அத பத்தி நீங்க யோசிக்காதீங்க நா ஆத்தா கண்ணுல படாம பாத்துகிடுறேன் முடிஞ்சவர......

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.