(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

இறங்கி வந்து பேசுறப்ப என்ன பேசுறது புள்ள....

ம்ம்.....பள்ளி கோடத்துக்கு செலவு பண்ணக்கூடாதுனு தான சொன்னாக.... கவருமெண்ட் பள்ளி கோடத்துல காசு கேக்க மாட்டாகலாம். அங்கனயே நம்ம தேனுவ சேத்து புடுவோம். பொறவு சின்ன சின்ன வேல ஆத்தா முன்னாடி சொல்லிக்கலாமுங்க.

சரி மங்க நாளயோட விளக்கு ஏத்தி முடிச்சு புடலாமுல...

முடிச்சி புடலாங்க..... ஆத்தா வேற கார்த்தி பையனை இங்க வுட்டு புட்டு வந்ததுக்கு என்ன வஞ்சிபுடுச்சி....

இத நா யோசிக்கலயே கடவுளே..... இந்தாங்க பைய தூங்கிட்டுதான் இருக்கான் கூட்டிகிட்டு போயிடுங்க..... இல்லனா துக்கு சேத்து உங்க அம்மா என்ன திட்டியே தீத்து புடுவாக....

வெங்கடாசலம் தூங்கும் தன் மகனை தூக்க முயற்சிக்க..... அவன் தேனுவின் கையை இருக்கமாக பற்றிக் கொண்டிருந்தான். இதனை பார்த்த மங்கை சிரிப்புடன் அவன் கையை பிரித்துவிட ......அது மிகவும் இருக்கமாக இருந்தது.

அடுத்த நாள் விடியலில் மங்கையுடன் தேனுவும் பெரிய வீட்டிற்கு சென்றனர். அங்கு திண்ணையில் மூகாம்பிகை வெற்றிலை பாக்கை மென்று கொண்டு அங்கு பணிபுரிபவர்களை கண்காணித்து கொண்டிருந்தார்.

மங்கை வந்தவுடன் " இன்னைக்காவுது மகாராணிக்கு வூட்டுக்கு வரணுமுன்னு தோணுச்சே "

இப்படித்தான் அவர் பேசுவார் என்று எதிர்பார்த்ததால் மங்கை, " காப்பி தண்ணி கொண்டு வரட்டுமா ஆத்தா "

விடிஞ்சு விளக்கு வச்சாச்சு இந்த நேரத்துல காப்பி தண்ணி குடிப்பவளா போய் சோத்த ஆக்குடி கூறுகெட்டவளே என்று பொரிய .

சரி ஆத்தா என்று தேனுவையும் வீட்டின் உள்ளே அழைத்து செல்ல போகையில் , அந்த சிறுக்கிய எங்கன கூட்டிட்டு போரவ ...........நீ போய் ஆவ வேண்டிய சோழிய பாரு....

மனதே இல்லாமல் சரி ஆத்தா என்று கூறிக்கொண்டே தேனுவை விட்டு விட்டு சென்றார்.

அந்த சிறுமி ஆத்தாவை மிரண்டு கொண்டே பார்க்க...

மூகாம்பிகை அதிகார தோரணையுடன், இங்கேறு புள்ள இங்கனக்குள்ள இருக்கணுமுனா வேலை செய்யோணு புரியுதா..... சும்மா உக்காந்த மேனிக்கே சோறு தின்னுபுட்டு போகலாமேன்னு நினைக்காத ....இங்கன ஒன்னு சத்திரம் கட்டி வைக்கல எல்லாருக்கும் தெண்ட சோறு போடுறதுக்கு ....

சிறுமி மிரண்டு கொண்டே தலையை ஆட்ட.......

போ.....

6 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.