உங்களுக்கு தெரிஞ்சா அடுத்த ஸ்டெப் எடுக்கலாம்ண்ணா"
"உறுதியா தெரிஞ்சால் உள்ளே தள்ளிடுவேன். ஆனால் என்ன லிங்க்னு தெளிவா தெரியலை…" மித்ரன் முணுமுணுத்தான்.
"எதோட லிங்க்.."
"ஒரு மிஸ்ஸிங் கேஸ்...உனக்கு தெரியும்… ம்.. மிலிட்டரி ஆஃபிசர் ஜ்வாலேஷ்.. அதுல இந்த பெண்ணோட பெயரை பின் பண்ணியிருக்காங்க"
"ஓ… "
"ஜஸ்ட் அந்த பொண்ணு வீட்டையாவது பார்த்துட்டு வரலாம்."
"அண்ணா…"
"அந்த ஏரியால நமக்கு தெரிஞ்ச யாராவது இருந்தால் தெரிஞ்சுக்கலாமே"
"ஓகே நாம் போகலாம். மயூரியை மார்க் பண்ண அல்ல… உங்களோட எண்ணம் தப்புனு நிரூபிக்கணும்"
இருவரும் கிளம்பி வெளியே வந்தார்கள். அங்கிருந்த ஜீப்பில் ஏறப்போனவனை தடுத்து,
"என்னோட வண்டியில போகலாண்ணா. ஜீப் இங்கேயே இருக்கட்டும்." வண்டியில் ஏறினான்.
"ஓகே" என்ற மித்ரன் அவன் பின்னேயே ஏறாக் கொண்டான்.
"ஆக்ட்சுவலி மயூரி வீட்டுக்கு பக்கத்து வீடுதான் ஹைடி வீடும். அதனாலதான் இந்த ட்ரிப்பிற்கு ஒத்துகிட்டேன்."
"ட்ரிப்பா… நாம ஜாலியா போகல.. வேலையா போகறோம்.. ஒழுங்க வண்டியை ஓட்டு"
"சரிண்ணா" அமைதியாக சைத்ரன் வண்டியை ஓட்டினான்.
"வீடு ரொம்ப தூரமா… போய்கிட்டே இருக்கு" மித்ரன் அலுத்து கொண்டான்.
"இதோ வந்துடுச்சு… அந்த திரும்பம்தான்" என்று சொல்லி வண்டியை ஓட்டியவன், திருப்பத்தில் ப்ரேக் போட்டான்.
"ஆவ்… அண்ணா நம்ம வீட்டு கார் நிக்குது. அம்மா இங்க என்ன பண்றாங்க"