(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

முன்னேற்றமும்  இல்ல. அப்படியேதான் போய்ட்டு இருந்துச்சு அதனால சொல்லல........ சரி நீங்க பொண்ணு பாக்கப் போறேன் சொன்னீங்களா.. உயிருக்குயிரா ஒருத்தி லவ் பண்ணும் போது நீங்க வேற பொண்ண கீது பாத்துரக்கூடாது இல்லையா.... அதுக்காகதான் சொன்னேன். ஆனா உங்க பையன் ஒத்துக்க வைக்கிறது அந்த கடவுள் கையில் தான் இருக்கு.

என்னடா இப்படி சொல்ற இப்பதான் நீ கன்வின்ஸ் பண்றேனு சொன்ன.... அது  50% தான்மா ஒர்க்அவுட் ஆகு மீதிய அந்த ஆண்டவன் தான் பார்த்துக்கனும்.

சரிமா நான் கெளம்புறேன்.

இரு கார்த்திக் இதை எடுத்துட்டு போ.

என்னதுமா இது.  கதிருக்கு பிடித்த பால் பாயசமும் கார்த்திக்கிற்கு பிடித்த பணியாரமும் அதிலிருந்தது. இது எப்பொழுதும் நடக்கும் ஒன்றுதான் என்று கார்த்திக் அதை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

அவன் விடை பெற்று அந்தப் பள்ளியின் வளாகத்தில் இருந்து வெளியேறும் பொழுது ஒரு குட்டிப்பெண் அழுதுகொண்டே இருந்தாள். அதனைப் பார்த்த நம் கார்த்திக்கிற்கு எப்படி வெளியேற முடியும்.

அந்தக் குட்டிப் பெண் அருகில் போய் அமர்ந்து கொண்டவன். பாப்பாக்கு என்ன வேணும்.

அந்த சின்ன சிட்டு கார்த்திக் கேட்டவுடன் இன்னும் தேம்பித் தேம்பி அழுக.......

அவன் சோகமாய் முகத்தை வைத்துக்கொண்டு அவளை விட்டு செல்வது போல் பாவனை செய்ய........

அந்த குட்டி  அதனை பார்த்து அம்மா....... என்று அழுக......

அவன் முகம் மலர சிரிப்புடன் திரும்பி துள்ளலுடன் ஓடிவந்து, அவளை தூக்கி சுற்றி அம்மா வேணுமா   உங்களுக்கு அம்மாகிட்ட போலாமா....... அழுக கூடாது. அம்மா இப்ப வந்திடுவாங்க எங்க சிரிங்க பார்ப்போம் என்று அவன் தூக்கி சுற்றிக்கொண்டே கூற அந்த குதூகலத்தில் அந்த குட்டி வாண்டு கிளுக் என்று சிரித்தது.

அதனைக் கண்ட கார்த்திக்கும் குதுகலத்துடன் விளையாட்டு காட்ட...சின்ன வண்டு அழுகையை மறந்து சிரித்துக் கொண்டிருந்தது. குழந்தைகள் உலகம் தான் என்ன ஒரு அருமையான உலகம் இல்ல......

சிறுது நேரம் விளையாட்டு காட்டியவன் அவளைக் கீழே இறக்கி தன் மடியில் அமர வைத்து, எந்த ஸ்டாண் படிக்கிறீங்க..... அந்த குட்டிப்பெண் பேந்த பேந்த  முழிக்க..... அதில் தன்னைத் தொலைத்தவன். குட்டிப்பெண் கன்னத்தில் அழகாக முத்தமிட்டான்.

என் பேரு கார்த்திக். உங்க பேர் என்ன???

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.