(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

ச்சாலினி என்று அவள் மழலை குரலில் அழகாக கூற,

ஓ...... ஷாலினியா ஸ்வீட் நேம்.

கார்த்திக்கிற்கு ஷாலுக்குட்டியைப் பார்த்தவுடன் ஏதோ ஒரு உணர்வு அவன் அடி மனதில் தோன்றியது. அது என்ன மாதிரி உணர்வு என்று அவனால் பிரித்தறிய முடியவில்லை. இந்த முகத்தை எங்கோ பார்த்தது போன்ற ஒரு மாயை. காலம் காலமாக ஷாலுவுடன் இருந்தது போன்ற ஒரு நினைவு. ஏன்??? இப்படி தோன்றுகிறது என்று தனக்குள் யோசித்துக் கொண்டிருந்தபோது, அவன் அருகிலிருந்த ஷாலு குட்டி அவனை மீறி பின்னால் பார்வையை செலுத்தி, அம்மா... அம்மா... அம்மா..... என்று குதூகலமாக கூற அவன் திரும்பி பார்த்து ஷாக் அடித்ததுபோல் அதிர்ந்து நின்று விட்டான்.

அது வேறு யாருமில்லை நம் தேன்மொழி தான்.

கல்யாணம்தான் ஆகிவிட்டதே என்று நினைத்தால் குழந்தையும் இருக்கா... என்ற யோசனையுடன் அவளையே   அதிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

தேன்மொழியும் கார்த்திக்கை தான் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆனால் அவள் பார்வையில் ஆச்சரியம் மட்டுமே நிறைந்திருந்தது.

ஹாய் சார் இங்க என்ன பண்றீங்க,

ஷாலு குட்டி அம்மாவை ஓடிவந்து அணைத்துக் கொண்டது. அவளை தூக்கி வைத்துக்கொண்டே... திரும்பவும் அவனை நோக்கி சார் என்று கூப்பிட...

மாயையிலிருந்து விடுபட்டவன் போல் சொல்லுங்க...என்று தடுமாற்றத்துடன் கூற,

நீங்க இங்க எப்புடி??? சார்.

கதிர் சாரோடது தான் இந்த ஸ்கூல் தேன்மொழி என்று அவன் விரைப்புடன் கூற,

ஓ அப்புடியா... என்று அவள் ஆச்சர்யமாக பார்க்க.....

ம்ம்.....

தேன்மொழியிடம் அவன் சில கேள்விகள் கேட்டு சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள சரியான சந்தர்பத்திற்கு காத்திருந்தான். அவனுக்கு இதற்கு மேல் பொறுமை இல்லை இன்றே அனைத்தையும் சந்தேகத்தையும் தீர்த்து விட வேண்டும் என்ற வெறி அவனுள் எழுந்தது.

அவளும் ஷாலுவை சமாதனபடுத்தி ஆசிரியரிடம் ஒப்படைத்துவிட்டு, விடைபெற பார்க்கிங் ஏரியாவை அடையும் போது

தேன்மொழி.....

அவள் திரும்பி பார்க்க கார்த்திக் தீவிர முகபாவனையுடன் நின்று கொண்டிருந்தான்.

எஸ் சார்.....

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.