(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

ஓகேன்னா சொல்லுங்க அபிம்மா.

என்னது கதிர லவ் பண்ற பொண்ணா!!!!!

நீங்க எதுக்கு மா இவ்வளவு ஷாக் ஆகுறீங்க. ஏன் என் நண்பனுக்கு என்ன குறைச்சல் அழகில்லையா???? அறிவில்லையா????

அது எல்லாம் இருக்கு தான். ஆனா யார்கிட்டயாவது சிரிச்சு பேசுறானா சரியான உம்மனா மூஞ்சு. இந்த உம்மனா மூஞ்சியும் லவ் பண்றானா... அந்த பொண்ணு ரொம்ப தங்கமா இருப்பா போலயே......அவர் கேலி போல பேச....

அம்மா உங்களுக்கே இது நியாயமா தெரியுதா... உங்க பையனையே நீங்க குறை சொல்றீங்களே.

எல்லா பசங்க மாதிரியே நீங்களும் இருந்துட்டா..... நான் ஏண்டா இப்படி பேச போறேன். நீங்க வயசு பசங்க மாதிரியா இருக்கீங்க. அவனவன் இருபது வயதிலேயே கல்யாணம் பண்ணி குழந்தை குட்டியை பெத்து லைஃப் என்ஜாய் பண்ணிட்டு இருக்கானுக. நீங்க என்னன்னா அரைக் கிழவன் ஆயிட்டீங்க. இன்னமும் கல்யாணம் என்ற பேச்சு எடுத்தாலே தலைதெறிக்க ஓட்டுறீங்க.

கார்த்திக் பதில் சொல்ல வாய் எடுக்கும் முன் அவன் அலைபேசி அவனை அலைக்க. எடுத்தவன் உங்க பையன்தான் கூப்பிடுறான் மா.

ஹலோ கதிர்....

எங்கடா இருக்க...

ஸ்கூல்ல

அங்க என்ன உனக்கு வேலை காலையிலேயே டிப் டாப்பா ட்ரெஸ் பண்ணி அங்க தான் நீ போனியா...... கம்பெனி வந்துருப்பனு வந்து பார்த்தால் ஆளைக் காணோம் சீக்கிரம் வந்து தொலைடா என்று அவன் வார்த்தைகளை கடித்து திப்ப....

சரிடா மச்சான் என்ன ரொம்ப புகழாத நான் வந்துட்டே இருக்கேன். இன்னும் 5 மினிட்ஸ்ல உன் முன்னாடி இருப்பேன்.

காது பஞ்சர் ஆயிடுச்சி மா என்று அவன் காதை தேய்த்துக்   கேட்டுக்கொண்டே கூற,

அபிராமி சிரித்துக் கொண்டே இந்தத் திட்டு திட்டுறான் உனக்கு கோபமே வராத டா.....

  என் நண்பன் என்கிட்ட பாசமா பேசுறான். அது உங்களுக்கு பொறுக்கலையாமா.....

சரி சரி ஏன் காலையிலே இப்படி ஒன்ன வறுத்து  எடுக்குறான்.

வேற என்ன அனிதா வந்திருக்கும். அதனாலதான் அப்படி.

ஓ...... இது ரொம்ப நாளா நடந்துட்டு இருக்கு போலயே.

ஆமாம்மா உங்க கிட்ட சொல்லனும்னு நினைச்சேன். ஆனா நான் நினைச்ச அளவு எந்த 

12 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.