(Reading time: 13 - 25 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

உங்ககிட்ட கொஞ்சம் தனியா பேசணும்.

சார்...

எஸ் தேன்மொழி கொஞ்சம் இம்பார்ட்டண்ட்...

ஓகே சார். இங்க எப்படி என்று தயங்கி கொண்டே கேட்க....

பக்கத்துல காஃபி ஷாப் இருக்கு என்று அந்த ஷாப்பின் பெயரை குறிப்பிட,

அவளும் சம்மதமாக தலையசைக்க...

அடுத்த ஐந்து நிமிடத்தில் காஃபி ஷாப்பில் இருவர் மட்டும் அமரும் இருக்கையில் எதிரெதிரே அமர்ந்திருந்தனர்.

அவள் குழப்பரேகையுடன் அவனை நோக்க...

அவன் பேச்சை எப்படி ஆரம்பிப்பது என்று தடுமாற,

இதற்கு இடையில் பேரர் வந்துவிட, வேறு வழி இல்லாமல் இருவரும் இரண்டு கேப்பச்சினோவை ஆர்டர் செய்தனர்.

அடுத்த நொடியில் தேன்மொழி கேட்ட கேள்வியில் அவன் ஞே என்று விழித்தான்.

அப்புடி என்ன கேட்ருப்பா. 🤔🤔

ரொம்ப யோசிக்காதிங்க நண்பர்களே. அவ உங்க பேர் என்ன சார்னு தா கேட்டா😆😆

சாரி சார் எனக்கு கதிர் சார் பத்தி தா அனிதா சொல்லிருக்கா. இன்டர்வியூ அப்பகூட உங்க நேம் தெரியறதுக்கான சூழ்நிலை அமையலயா. இப்ப திடீர்னு எங்கிட்ட பேசனும் காஃபி ஷாப் வர கூட்டி வந்துருக்கீங்க, அது தான் என்று அவள் அசடு வழிய.......

அவன் அவள் செய்கையில் தன்னை தொலைத்தவனாய், சிறு மென்கையுடன்

கார்த்திக் என்று கூற,

அவள் இப்பொழுது என்ன மாதிரி உணர்ந்தாள் என்று தெரியவில்லை. கார்த்திக்கா..... என்று சிறிது தடுமாற்றத்துடன் கூற,

எஸ் தேன் மொழி.

தன்னை சமநிலை படுத்தியவள். ஓகே சார் என்ன எங்கிட்ட பேசனும் என்று அவள் நேரடியாக விஷயத்திற்கு வர ,

எப்படி ஆரம்பிப்பது என்று தைரியம் வராமல் இருந்தவன். அவள் கேட்ட தோனியில், எதாவது கேட்க வேண்டும் என்ற அவசரத்தில் சற்றும் சிந்திக்காது.

உங்க ஹஸ்பெண்ட் நேம் என்ன?? என்று கேட்டுவிட்டு தன்னையே நொந்துக் கொண்டான். எதையும் தெளிவாக பேசாமல் நேரடியாக ஹஸ்பெண்ட் நேம் கேட்டுவிட்டோமே ஏதாவது தப்பாக எடுத்துக்கொள்வாளா என்று அவன் யோசித்து முடிப்பதற்குள், அவள்

12 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.