(Reading time: 6 - 12 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

அந்த தீவுக்கு போக இவ்வளோ கஷ்டம் என்று நினைக்கவில்லையே.. இப்போது என்ன செய்ய என்று பிரசாத் கேட்க கவலையை விடுங்க சார் என்று சொல்லி கொண்டே அருகில் வந்தான் ராகவ்.

அப்பா இந்த நீரோட்டத்தை கடக்கனும் என்றால் சற்று தூரம் தள்ளி போக வேண்டும். அங்கு ஒரிடத்தில் மட்டும் இரண்டு சுழல் பகுதிக்கு இடையே பெரிய இடைவெளி இருக்கிறது.. அந்த இடத்தில் நாம் வேகமாக எதிர்நீச்சல் போட்டால் அடுத்த பக்கத்தை எட்டி விடலாம் என்றான்.

நீ சொல்றது சரிதான் ராகவ்.ஆனால் நாம் நீச்சல் அடிக்கும் போது சற்று தடுமாறினாலும் அந்த சுழலுக்கு இரையாகி விடுவோமே என்றார் பிரதாபன்.

அதற்காக முயற்சிகாமல் இருக்க முடியாதே... வெற்றி பெறும் வரை போராடு என்று நீங்கள் தானே சொல்வீர்கள் என்று சொல்ல மூவரும் ஆயத்தமானார்கள்.

முதலில் ராகவ் எதிர் நீச்சல் போட்டு அடுத்த கரையை அடைந்தான். அடுத்து பிரதாபனும் தாண்ட டாக்டர் பிரசாத் மட்டும் சற்று தடுமாற மின்னல் வேகத்தில் உள்ளே சென்று அவரை இழுத்து கொண்டு வெளியே வந்தான் ராகவ்.

ஒருவழியாக அப்பாடா என்று மூச்சு விட்டவர்கள் அடுத்த பக்கம் பார்க்க இன்னும் இருக்கா என்று திகைத்து போனார்கள்.

அடுத்த சிறிது தூரம் வரை கடல் நீர் மறைந்து பனிக்கட்டியாக காட்சி அளிக்க அதை எப்படி கடப்பது என்று புலம்ப ஆரம்பித்தனர்.

ஆனால் ராகவ் வழி இருக்கும் என்று உறுதியாக கூறி விட்டு தேடிப் பார்த்தான். அப்பா இந்த பனி மீது நடந்து தான் அடுத்த பக்கம் செல்ல வேண்டும் என்று சொல்ல பிரசாத் பிரதாபன் இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டே, ராகவ்  எங்கள் காலில் செருப்பு கூட இல்லை... ஏற்கனவே குளிரில் கால் மறத்து போய் விட்டது என்று சொல்ல அப்பா... வழியே இல்லை... பனியில் ஏறியதும் உங்கள் லைப் ஜாக்கெட்டை கழற்றி கீழே போட்டு அதன் மீது மிதித்து கொள்ளுங்கள். பின்பு மெதுவாக மெதுவாக நகர்த்தி முன்னே செல்லுங்கள். அதிக தூரம் இல்லை. எளிதாக கடந்து விடலாம் என்றான்.

வேறு வழி இல்லாமல் போக மூவரும் பனிக்கட்டியில் ஏற நடக்க தொடங்கினர். சிறிது நேரத்தில் பிரதாபனுக்கு மூச்சு வாங்க அவரிடம் இருந்து பையை வாங்கி தன் முதுகில் மாட்டிக் கொண்டான்.

பிரசாத் அதிர்ச்சியாக பிரதாபனை பார்க்க வேறு வழியில்லை என்று சைகை காட்ட தொடர்ந்து முன்னேறினர்.

பனிக்கட்டியை கடந்த பிறகு தீவை அடைய சிறிது தூரம் மட்டுமே இருக்க அதை நீந்தி கடந்து

14 comments

  • Eppov!! Unga karpanai level vera ji :hatsoff: Nagini mathiri pugai, oru water land marupakam panikatti ya :eek: :eek: innum yena ellam.sagasam pana poraru?? But master Raghav has planned for a master plan 👍 so ramu than ivangalai captivate seithu irukangalo?? Correct spot la pause panitingale ji facepalm fantastic flow!! 👏👏👏👏👏<br /><br />Waiting for next update.<br />Thank you.
  • Dear Jeba! இந்த புத்தாண்டை சில்சீ தங்கள் கதை, கவிதைகளை அள்ளித் தெளித்து 'ஜெபா ஆண்டு' என அறிவித்துள்ளனர்! தங்களுக்கு இந்த கௌரவம் உரியதுதான்! பாராட்டு!
  • குடல் மார்னிங்!! அன்பு ஜெயாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டில் நிறைய எழுதுங்கள்! புத்தகங்கள் வெளியிடுங்கள்! திரையுலகிலும் புகுந்து வெற்றி பெறுங்கள்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.