(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

    இங்கே வந்த ஆம்பளைங்கள நான் எத்தனாவது கேட்டேன்.

     சுடுதண்ணீர் காலில் பட்டது போல் அவள் அவனை விட்டு விலக...

    அவன் ஒரு ஏளன சிரிப்புடன் பரவால்ல என்னையவே உன் அழகால மயக்கிட்டியே நல்ல கைகாரி தான் நீ.

      அவள் உடல் கூசிக் போக கண்கள் மடைதிறந்த வெள்ளம்போல் கண்ணீரை சுரக்க விக்கித்துப் போனாள் பாவையவள்.

    அனைத்தையும் செய்துவிட்டு தன் மேல் குற்றம் இல்லாதது போல் பேசி விட்டு செல்கிறானே இவன் மனிதன் தானா இல்லை அரக்கனா..

        ஒரே நாளில் அவனது இந்த கொடூரமுகத்தை கண்ட  அவளது மனம்விட்டுப் போனது. அவன் கூறியதை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவள் கண்கள் கண்ணீரை மட்டும் நிற்காமல் சுரந்து கொண்டிருந்தது..

     அவன் காலையில் பேசிய வார்த்தையின் வலியை தாங்க முடியாமல் தான் அவள் அந்த இடத்தை விட்டு வெளியேறினால், வரும் வழியில்தான் அசோக்கை கண்டால் அசோக் தான் அவளுக்கு ஆறுதல் மொழி பல கூறி தன்னிலை பெற செய்து சிரித்த முகமாக அவளை அனுப்பி வைத்தான். ஆனால்  மறுபடியும் வந்து நிம்மதியைத் குழைத்து விட்டு சென்று விட்டானே பாவி.

        அசோக் அனிதாவின் உயிர்த்தோழன் அனிதாவிற்கு ஏதாவது ஒன்றென்றால் துடிப்பவன் இவன் மட்டுமே. ஏனென்றால் சிறு வயது முதல் பள்ளியிலிருந்து கல்லூரி வரை ஒன்றாகப் படித்தவர்கள். இவன் இருக்கும் தைரியத்தில் தான் இவளை சென்னையில் வேலைக்கு அனுப்பியிருந்தனர் அவளது பெற்றோர். தேன்மொழி சிறிது மாதங்களாகத்தான் இவர்களுடன் இணைந்து இருக்கிறாள். தேன்மொழி வந்த பிறகு அனிதாவிற்கு துணையாக இருக்கிறாள் என்று இவனும் அவ்வளவாக அனிதா - வை சென்று பார்ப்பதில்லை. தேன்மொழி வருவதற்கு முன்பு இவன் தான் இவளுக்கு பாதுகாப்பாக ஒரு வீட்டை பார்த்து கொடுத்தான் அடிக்கடி வந்து நன்றாக இருக்கிறதாளா என்று பார்த்து விட்டு செல்வான்.

        இந்த நேரத்தில் அனிதாவை சாலையில் கண்டவன் ஏதோ சரியில்லை என்பதை மட்டும் உணர்ந்தான்.

  அனிமா இங்க என்ன பண்ற..

அவனை பார்த்தவுடன் முகத்தை இயல்பாக்கி சிரித்தவள் ஹலோ  அத நான் தான் கேட்கணும்.

  ம்ம்..... அப்படியா,

24 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.