(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 05 - தனுசஜ்ஜீ

சோக் அனிதா வீட்டு வாசலின் முன் பைக்கை நிறுத்த.... அதிலிருந்து இறங்கியவள் அவனிடம் சிறிது நேரம் சிரித்து பேசி விட்டு வீட்டை நோக்கி சென்றாள்.

      இதனை பார்த்துக் கொண்டிருந்த இரு கண்களுக்கு சொந்தக்காரனின் இரத்தம் தாறுமாறாக எகிறியது. வண்டியை விட்டு கீழே இறங்கியவன்  எதையும் யோசிக்காது விறுவிறுவென்று சென்று அனிதா வீட்டின் காலிங் பெல்லை அழுத்தினான்.

    அப்பொழுதுதான் உள்ளே நுழைந்து தாழிட்டவள். யாருடா அதுகுள்ள  என்று நினைத்துக் கொண்டே கதவை திறந்தவள் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை கதிர்-யை.

        அந்த இரு கோலிகுண்டு விழிகளும் வெளியே வந்து விழுந்து விடும் அளவிற்கு அவள் பே என்று விழிக்க...

    அந்த விழிகளில் ஒரு நொடி விழுந்தவன் அடுத்த நொடியே அவளை உள்ளே தள்ளி அவனும் உள்ளே சென்று கதவை மூடினான்.

    சார் என்ன பண்றீங்க...

ஜஸ்ட் ஷட் அப் யாரவன்.

யாரு சார்.

டோன்ட் ஓவர் ஆக்ட்.

அவள் முகத்தில் குழப்ப ரேகைகள் உடன் அவனையே ஏறிட,

அவளை தீயாய் முறைத்தவன். So உனக்கு தெரியாது என்று வார்த்தைகளை கடித்துத் திப்ப...

அவள் இல்லை என்பது போல் இடது வலதாக தலையை ஆட்டினாள்.

பைக்ல பல்ல இளிச்சி கிட்டு  வந்தியே அவனதான் கேட்கிறேன்.

(மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறுதா என்று நாம் நினைக்க..... உண்மையில் அனிதாவிற்கு குளுகுளுவென்று இருந்தது. நம்ம ஆளுக்கு பொறாமை கூட வருதே... அப்படின்னா வெட்டி வீராப்பு தானடா.)

வாய் வரை வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு முகத்தை விரைப்பாக வைத்து அது எதுக்கு உங்களுக்கு.

Well... சொல்ல மாட்ட என்று அவனுக்கே உரிய கம்பீரத்துடன் கேட்க...

நானும் உனக்கு சளைத்தவள் இல்லை என்பது போல் Yes... சொல்ல முடியாது நான் தெரியாம தான் கேக்குறேன். இப்படி என்ன ஃபாலோ பண்ணி வீடுவரை வந்து என் பர்சனல் பத்தி கேட்கிறிங்களே. அதுக்கு என்ன அர்த்தம் சொல்லுங்க நீங்க கேட்ட கேள்விக்கான பதிலை நான் சொல்றேன் என்று தடாலடியாக அவள் கூற...

அது என்று சிறிது தடுமாறியவன். அவனுக்கே உரிய அலட்சிய புன்னைகையுடன் ஓவர்

24 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.