(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

மம்... அப்படித்தான்.

அது வேற ஒன்னும் இல்ல டா. இங்க நெறைய ப்யூடிஸ் போயிட்டு இருக்காங்கள அதைப் பார்க்கலாம்னு வந்தேன்டா.

ம்க்கும்..... சைட் அடிக்கிற மூஞ்ச பாரு..... என்று அவன் தலையில் தட்ட,

ஓய்... என் அழகுக்கு என்ன குறைச்சல்...

உன்னை குறை சொல்ல முடியுமாடா என் செல்லம், என்ன இந்த பியூட்டீஸ் தான் உன் அழகுக்கு குறைச்சலாக இருக்காங்கடா...

அப்படியா... அப்படியா.... என்று கேட்டுக் கொண்டே அவன் தலையை கோதி ஸ்டைல் செய்ய...

அவன் செய்கையை பார்த்தவள் பட்டென்று சிரித்து விட்டாள்.

ஓய் என்ன சிரிக்கிற...

முடியல மச்சி வண்டி எடுடா.....

அப்படியே பேச்ச மாத்தாம பதில் சொல்லு அப்பதான் வண்டி எடுப்பேன்.

தலைவலி அச்சு அதுதான் ஹாஃப் டே லீவ்.

என்ன இப்ப எல்லாம் அடிக்கடி தலைவலி சொல்ற அனிமா. ஹாஸ்பிடல் போய் பாத்துட்டு வந்துருவோமா?? என்று அவன் அக்கறையுடன் கேட்க.

ஐயோ அதெல்லாம் ஒன்னும் இல்ல அச்சு நா காலைல சாப்பிடல அதுவா இருக்கும்.

   லூசு உன்ன சாப்பிடாமல் இருக்க கூடாதுனு எத்தனை தடவை சொல்றது.நீ முதல்ல வண்டில ஏறு சாப்புட போவோம்...

   குட் அச்சு. இது நல்ல ஐடியா. என்னை நீ மட்டும் தான் புரிஞ்சிக்கிற டா செல்லம் என்று ஐஸ் வைக்க...

   போதும் போதும் ஐஸ் வெச்சது ஏறு ஏறு...

பைக்கில் ஒருபக்கமாக அமர்ந்தவள் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள். அப்போதைக்கு அந்த ஆறுதல் அவளுக்கு தேவைப்பட்டது.

 

அவளுடைய ஒவ்வொரு அசைவுக்கான காரணமும் அறிந்தவன் அவன் ஒருவனே. அப்படியிருக்கையில் அவளுடைய முகத்தை பார்த்து சந்தேகப்பட்டவன் இப்பொழுது அவள் செய்கையே அவனுக்கு உணர்த்தியது அவள் ஏதோ வேதனையில் உள்ளாள் என்பதை....

     ஒரு கையினை பின்னே செலுத்தி அவள் தலையை ஆறுதலாக தடவியவன் வண்டியை உயிர்ப்பித்தான்.

   அவர்கள் நேராக சென்றது வழக்கமாக செல்லும் உணவகத்திற்கு உள்ளே சென்றவுடன் 

24 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.