மதுமதி அறைக்குள் செல்லும் வரை அங்கு சபையில் மயான அமைதி நிலவியது அவள் சென்றதும் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அனைவரின் முகத்திலும் ஏமாற்றமே மிஞ்சியது. கூடவே கோபமும் எழுந்தது
”என்னப்பா இது பொண்ணு இப்படி சொல்லிட்டு போகுதே” என ஒருவர் ஆரம்பித்தார்
மதுமதி அவ்வாறு சொன்னதைக்கேட்டு ராகவனின் குடும்பமே திக்பிரமையில் இருக்க கணேசனோ
”யாரை பத்தி சொல்லிட்டுப் போறா” என கேட்டாரே ஒரு கேள்வி அதில் அனைவருமே அதிர்ந்தார்கள்
”பொண்ணோட அப்பாவுக்கே நடக்கறது தெரியலையே இனி என்னத்த சொல்றது, அதான் பொண்ணே சொல்லிருச்சே, இனி நாம இங்க இருந்து என்ன செய்றது கிளம்புவோம், நல்லா கூப்பிட்டு வைச்சி அவமானப்படுத்தி அனுப்பறாங்க, இருக்கட்டும் இருக்கட்டும் என்னிக்காவது ஒருநாள் நாம யார்ன்னு காட்டுவோம்” என வந்திருந்தவர்களில் சிலர் சொல்ல அதைக்கேட்ட அனைவரும் கோபமாகவும் ஏமாற்றத்துடனும் அவமானத்தில் முகம் வெளுத்துப் போய் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்கள்.
அனைவரும் சென்றதும் அந்த வீடே காலியாகிவிட்டது. ராகவனது குடும்பமும் கணேசன் மட்டுமே முற்றத்தில் இருந்தார்கள் சுபத்ரா மதுமதியை தேடி வந்தார்
”மது என்னாச்சி உனக்கு? யார் அந்த கதிரவன்? யாரை பத்தி பேசற, கதிரவன்னு யாருமே உன்னை பொண்ணு பார்க்க வரலையேம்மா, எதுக்கு தப்பான பேரை சொல்ற” என கேட்க அவளிடம் பதில் இல்லை அமைதியாக இருந்தாள்.
இங்கு முற்றத்திலோ கணேசன் வானத்துக்கும் பூமிக்குமாக குதித்தார், அவரை சமாதானம் செய்யவே யாராலும் முடியவில்லை, தாங்கள் பார்த்து வைத்த மாப்பிள்ளைகளை வேண்டாம் என கூறியிருந்தாலும் பரவாயில்லை கதிரவனை வேண்டும் என்றாளே என்ற ஆதங்கம் ராமலிங்கம், மரகதம், ராகவனிடம் கூட எழுந்தது. ஆனாலும் என்ன செய்வது என தெரியாமல் அமைதி காத்தார்கள், ஆனால் கணேசன் மட்டும் தாம் தூம் என குதித்தார்.
”என் மானம் மரியாதையே போயிடுச்சி, இதுக்கு நானே என் பொண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பேன், அப்பவே நான் சொன்னேன் யாருமே வேணாம்னு கேட்காம மதுவை பேச சொன்னீங்க, பாவம் அவளுக்கு யார் என்னன்னு கூட தெரியாம ஏதோ ஒருத்தன் பேரை சொல்லிட்டு போயிட்டா, இப்ப என்ன செய்றது இந்த விசயம் ஊர் முழுக்க பரவிச்சின்னா என் பொண்ணு வாழ்க்கை என்னாகிறது, இதை நான் கேட்டேனா இப்படியெல்லாம் நடத்தி என் மானத்தை வாங்கிட்டீங்களே” என ராமலிங்கம் குடும்பத்தின் மீது பழியை போட ராமலிங்கமோ