This is a Chillzee Originals episode. Visit Chillzee originals page for other Chillzee original stories.
“உங்களைப் போல அயராம உழைக்குறவங்களுக்கு இதுக் கூட செய்யலைனா எப்படி தம்பி. வாங்க வந்து உட்கார்ந்து ரெஸ்ட் எடுத்துட்டே பேசுங்க” – ராமசாமி சிவக்குமார் மற்றும் அவனது நண்பர்களை வீட்டிற்குள்ளே அழைத்து வந்தார்.
சிவக்குமார், தீபக், அபிலாஷ் தவிர இன்னும் இரண்டு இளைஞர்களும் வந்திருந்தார்கள்.
கேசவன் மற்றும் அந்த வீட்டில் சமையல் வேலை செய்யும் ராகவன், வந்திருப்பவர்களுக்கு டீயும், சிற்றுண்டியும் கொடுத்து பரிமாறினார்கள்.
மேனகா, அப்சரா இரண்டுப் பேரும் இதை அறைக்குள்ளே இருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நின்றுக் கொண்டிருந்தார்கள்.
“உங்க மூணுப் பேரை தெரியும் இவங்க இரண்டுப் பேரும் யாருன்னு புரியலையே?” – ராமசாமி புதியவர்கள் இரண்டுப் பேரையும் பற்றி விசாரித்தார்.
“இவன் கோபால், அவன் வைபவ். என் கம்பெனியில வேலை செய்றவங்க” – சிவக்குமார் சுருக்கமாக அவர்கள் இருவர் பற்றி சொல்லி விட்டு சிற்றுண்டியை கொரிக்கத் தொடங்கினான்.
வைபவுக்கு பற்றிக் கொண்டு வந்தது. அவன் சிவக்குமாருக்கு உறவினன். சுற்றிய சொந்தம் கூட கிடையாது. நேரடி உறவு. சிவக்குமாரின் தாத்தாவும் வைபவுடைய தாத்தாவும் அண்ணன் தம்பிகள்.
வேலைக்காரன் என்று சொல்லாமல் உறவினன் என்று சொன்னால் இவனுக்கு என்ன குறைந்தா போய் விடப் போகிறது?
கோபாலுக்கு வைபவின் முகத்தை வைத்தே அவன் மனதுக்குள் ஓடும் எண்ணம் புரிந்தது. வைபவை கீ கொடுத்து வைப்பது முக்கியம் என்பது அவனுக்குத் தெரியும். அதனால் ஏற்கனவே எரிந்துக் கொண்டிருந்த தீயில் பெட்ரோல் விடும் வேலையை ஆரம்பித்தான். வைபவ் பக்கத்தில் நெருங்கி அமர்ந்துக் கொண்டு, “பார்த்தீயா, உன்னை அவன் மதிக்குறதே கிடையாது. நீ தான் அவனுக்காக மாடாய் உழைக்குற. என்னையும் உன்னையும் சேர்த்து ஒரே மாதிரி சொல்லுறான்.”
வைபவ் அதைப் பற்றி கவலைப் படவில்லை. அந்த தீபக், அபிலாஷ்க்கு அவன் எந்த விதத்தில் குறைந்துப் போய் விட்டான்? சிவக்குமார் அவர்களை தலையில் தூக்கி வைக்கிறான், இவனை கீழே போட்டு மிதிக்கிறான்.
சாப்பிட்டுக் கொண்டிருந்த சிவக்குமாருக்கு திடிரென்று விக்கல் எடுக்கத் தொடங்கியது.
“ராகவா தண்ணீ எடுத்துட்டு வா” – ராமசாமி குரல் கொடுத்தார். ராகவன் வரும் வழியை காணோம்.
அதுவரைக்கும் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த மேனகாவால் அதற்கு
Adhiradi apsara super 👌 jovial abhi yum kuda
Thank you.