(Reading time: 9 - 17 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

சொல்லுங்க தம்பி என்ன விஷயம்.

என் பெயர் கதிரேசன்-ங்க. அபிராமி அத்தையோட  தம்பி பையன். நான் வெளியூர் போய் இருந்தப்ப அத்தை ரெண்டு வாரத்துக்கு முன்னாடி தவறிடுச்சாமே....

    கதிரின் குரல் கேட்டவுடன் அவன் வரவை தெரிந்து கொண்டவள் அவளுடைய ரூமை விட்டு வெளியே வராமல் அவர்கள் பேசுவதை கவனிக்கலானாள்.

    கதிர் கூறியதைக் கேட்ட அந்த பெண்மணி உடனே ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டது. அட ஆமாம் தம்பி பொட்டபுள்ளே தனியா விட்டுட்டு போயிடுச்சு. இந்த சின்ன பிள்ளைக்கு சொந்தமும் இல்ல. ஒன்னும் இல்லாம பொட்ட புள்ள காரியத்தை எல்லாம் எப்படி ஒண்டியா பண்ணும். எங்க அண்ணன் பண்ண தப்புக்கு இந்தபிள்ளை என்ன பண்னும். அதுதான் நான்ங்க கூடிகிட்டோப்  தம்பி. ஆமா அபிராமி சொந்தமெல்லாம் இந்த ஊர்ல இல்லையே உனக்கெப்புடி சேதி தெரிஞ்சது.

   நான் இந்த ஊர்லதாங்க வேலை செய்யறேன். சொந்தமெல்லாம் வெளியூர்ல தாங்க இருக்கு. அத்தைய அடிக்கடி பார்க்க வருவேன். அப்ப எங்க சொந்தகாரவுங்க எல்லாரும் என்னாலதான் ஒன்னு சேர போகுதுன்னு சொல்லிட்டு இருப்பாங்க.

    அப்படியா தம்பி நல்லதுதான். ஆனா இனி அது நடக்காது போலையே..

   ஏன்மா என்னாச்சு...

   இந்த பொட்ட புள்ள எங்கப்பா தனியா விடுறது. அதுதான் எங்க சொந்தத்திலேயே மாப்பிள்ளை பார்த்து கட்டி வைக்கலாமுனு முடிவெடுத்திருக்கோம்.

   அட என்னமா நீங்க விஷயம். தெரியாதா??? உங்களுக்கு.

   என்ன விஷயம் நெற்றியை சுருக்கி அந்தப் பெண்மணி கேட்டார்.

   அபிராமி அத்த பொண்ணு பிரியதர்ஷினிய எனக்கு கட்டி கொடுத்து தான் குடும்பத்தை ஒன்னு சேர்க்கணும்னு சொல்லிகிட்டு இருந்தாங்கம்மா...

   உடனே கன்னியம்மாளுக்கு பகீரென்றது. என்னடா எந்த பிரச்சினையும் இல்லாம சொத்து கைக்கு வர போகுதுன்னு பார்த்தா இப்ப இவங்க பிரச்சனை பண்றானே...

   அது சரி நீ தான் அபிராமி பார்த்த மாப்பிள்ளைனு நாங்க எப்படி நம்பறதுபா. அப்படியே நீ அபிராமி பார்த்த மாப்பிள்ளையா இருந்தாலும் இப்படி ஒத்தையில வந்து இருக்க.... உன் குடும்பத்தோட வந்தா கூட பரவால உன்ன எப்படி நம்புறது,

   இல்லம்மா நா சொல்றது உண்மைதான். குடும்பம் ஒன்னு சேருரதுக்கு தானே எனக்கு கட்டிக் கொடுக்குறேனு  சொன்னாங்க. பின்ன எப்படி குடும்பத்தோட வருவேன்.

   நீ என்ன சொன்னாலும் நடக்காது பா. நாங்க பிரியாக்கு மாப்பிள்ளை பாத்துட்டோம்.

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.