(Reading time: 9 - 17 minutes)
Kanave kalaiyathe
Kanave kalaiyathe

    இதை சொன்னவுடன் கதிருக்கு சுருக்கென்று கோபம் வந்தது. தன்னை அடக்கியவன். ம்மா நான் சொல்றது உண்மையா இல்லையான்னு அந்த பொண்ணு பிரியதர்ஷினி கிட்ட கேளுங்க. அபிராமி அத்தை பொண்ணு கிட்ட கூட சொல்லி சம்மதம் வாங்கிட்டதா சொன்னாங்க..

    என்னப்பா நீ புரியாம பேசிகிட்டிருக்க. அடியே சுமதி அந்த பிரியா புள்ளய கூட்டியா....

   உடனே தர்ஷினி படுக்கையில் படுத்து தூங்குவது போல் பாசாங்கு செய்தாள். சுமதி அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்று தர்ஷினியை எழுப்ப...

  தூக்கத்திலிருப்பவள் போல.... என்ன சித்தி...

  உன்ன பெரியத்த கூப்பிடுது வா...

வரேன் சித்தி...என்று எழுந்தவள். தன்னை சரிப்படுத்திக் கொண்டு ஹாலை நோக்கி சென்றாள்.

    அங்கே இருப்பவனே தெரியாதது போல் ஒரு பார்வை பார்க்க...

   இதை கவனித்த கன்னியம்மாளுக்கு அப்பொழுதுதான் உயிரே வந்தது.

இந்தக் குட்டிக்கு எதுவும் தெரியாது போலயே சமாளிப்போம் என்று கன்னியம்மாள் மனதில் திட்டம் தீட்டினாள்.

     என்ன அத்தை இது கூப்பிட்டீங்க..

  வாம்மா பிரியா இங்க உட்காரு. இந்த பையன உனக்கு தெரியுதா...

   அவனை உற்று நோக்கியவர் தெரிலயே அத்த... யாரு??

   இப்ப என்னப்பா சொல்ற வம்பு பண்றதுக்குனே வந்திருக்கியா....

   ஐயோ அப்படி எல்லாம் இல்ல மா...

ஏங்க உங்க பேரு பிரியதர்ஷினி தான...

ஆமா....

பாத்திங்களாமா. அத்தை சொல்லாமல் இவுங்க பேரு எனக்கு எப்படி தெரியும்.

  என்னப்பா நீ சின்னப்புள்ளத்தனமா பேசிட்டு இருக்க. பேரு தெரிஞ்சா நீ சொல்றதெல்லாம் நம்ப முடியுமா!! இந்த ஏரியால இருக்க எல்லாருக்குமே தான் இவ பேரு தெரியும்.

   அம்மா உங்களுக்கு நான் எப்படி புரிய வைக்கிறது தெரியல. சரி தர்ஷினி உங்க அம்மா உங்களுக்கு மாப்பிள்ளை பார்த்து இருக்கிறதா சொன்னாங்களா... இல்லையா....

    ஆமா சொன்னாங்க.....

  இப்பொழுது இந்த இந்து பெண்மணிகள் முகமும் வேறுவிதமாக மாறியது.

   அது நீதானு எப்படி நாங்க நம்புறது.

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.