ஃபைலை திறக்காமல் ஆனந்திடம் பேசினார் ஷீலா.
“உனக்கு வேற வேலை இருந்தா நீ பாரு ஆனந்த். உங்க அக்கா அகிலாக்கு உதவ ஒருத்தர் வேணும்னு சொல்லி இருந்தா. நானே அந்த பொறுப்பை ஏத்துக்கிட்டு இருக்கேன். நாங்க நிறைய நேரம் விவாதிக்க வேண்டி இருக்கும்”
‘நான் அகிலாவிடம் தனியாக பேச வேண்டும்’ என்பதை அவர் சுற்றி வளைத்து சொல்கிறார் என்பது ஆனந்திற்கு புரிந்தது. அகிலாவிற்கும் கூட புரிந்தது... இந்த பேச்சுக்கெல்லாம் யார் அசருவது என்று அகிலா யோசிக்கும் போதே, ஆனந்த் கேள்வியே கேட்காமல் எழுந்துக் கொண்டான்.
“ஆமாம்மா, எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் அதைப் பார்க்குறேன். உங்களை அப்புறமா சந்திக்கிறேன் அகிலா” என அவனின் வழக்கமான கண்ணில் மின்னும் சிரிப்புடன் சொல்லி விட்டு விடைப் பெற்று சென்றான் ஆனந்த்.
அகிலாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது! அமரேந்திர பாஹுபலி ரேஞ்சில் அப்படியே அம்மாவின் சொல் பேச்சு கேட்கும் பெரிய குழந்தைகள் இந்த உலகத்தில் இருக்கிறார்களா???!!!! என்ன அதிசயம்!!!
“என்னம்மா ஹாட் சாஸ் பெரிய யோசனையா தெரியுது?”
ஆனந்த், பிறைநிலா அந்த அறையில் இருந்துப் போன உடனேயே ஷீலாவிடம் இருந்து மஹாராணி தோரணை விடைபெற்று சென்று விட்டதை உணர்ந்து கண்களை விரித்து கேலியாக சுழற்றினாள் அகிலா!
“பார்த்து கண் விழி வெளியே வந்திரப் போகுது. என்ன அப்படி யோசனை உனக்கு?”
“எங்கம்மா நீங்க சொன்னதுப் போல ‘நீ வேற வேலையைப் பாரு’ன்னு என் கிட்ட சொல்லி இருந்தா, என்னமோ பயங்கரமான விஷயம் பேசப் போறாங்கன்னு புரிஞ்சு நான் அசையாம அங்கேயே தான் இருப்பேன். உங்க குடும்பத்துல அந்த க்யூரியாசிட்டி மிஸ் ஆகுதேன்னு பார்த்தேன் மேடம்”
“மிலிட்டரி ட்ரெய்னிங் கேள்விப் பட்ருப்பீயே அகிலா. அதுப் போல இது எல்லாம் அரசக் குடும்பத்துல பிறந்தவங்களுக்கு குழந்தையா இருக்குறதுல இருந்தே சொல்லித் தருவாங்க”
“ஆனால் ஏன்? நீங்களும் எல்லோரையும் மாதிரி சாதாரணமா இருக்கலாமே? அட்லீஸ்ட் உங்க குடும்பத்துக்கு உள்ளே இருக்கலாமே?”
ஷீலா பதில் தெரியாதவராக ஒரு கணம் திகைத்து அமைதியாக இருந்தார்!
“சாரி மஹாராணி. உங்களை ஸ்டன் செய்யனும்னு கேட்கலை. எனக்கு நீங்க செய்றது எல்லாம் எக்ஸ்ட்ரா ஆர்ட்னரியா இருக்கு. அந்த டிஸ்கஷன் விட்டுடுவோம். நீங்க என்னை
Akila ponnu mudivu pannita
Ini yaralum matha mudiyadu😁😁😁
entertaining and cool update bindu ma'am 👏👏👏👏👏 royal family oda p ellam rombha formal aga irundhalum the transparency between the family members and the attachment is really cool and sheela is toooo humble
hot sauce ena panuvanganu parka waiting....
Thank you
nice and refreshingly new flow Binds. Keep it rolling