விஜய் தன் வீட்டிலோ ஹனிகாவிடம் பல கதைகளை பேசிக் கொண்டிருந்தான், அவனைப்பற்றியும், ஜனனியை பற்றியும், அவனது பள்ளி கல்லூரி நாட்களில் நடந்த சுவாரஸ்யமான நினைவுகளை கதைகளாக சொல்லிக் கொண்டிருந்தான், வாய் ஓயாமல் பேசிக் கொண்டிருந்தான், அவன் சொன்ன கதைகளில் பாதி கதைகள் கூட ஜனனிக்கு தெரியாது இப்படியும் நடந்ததா என ஆச்சர்யப்பட்டுக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தாள்.
கம்பெனி வேலை பணம் அது இது என விஜய் அனைத்தையும் மறந்துவிட்டதாக நம்பிய ஜனனிக்கு இப்போது விஜய் சொல்லிய கதைகளால் ஏமாற்றமே பிறந்தது. தான் நினைத்தது தவறு என்பதை இப்போது உறுதியாக நம்பினாள். விஜய் சொல்லும் கதைகளை ஹனிகா மட்டுமல்ல ஜனனியும் அவளது குடும்பத்தார் அனைவருமே கேட்டுக் கொண்டிருந்தார்கள், இதில் கௌதமும் அவனது 4 நண்பர்களும் மட்டும் ஹாலில் இல்லை, அவர்கள் இல்லாததை பற்றி கூட இவர்கள் கவனிக்கவில்லை.
சகானாவிற்கு இப்படியெல்லாம் ஒருவர் இருப்பாரா என விஜயை மெச்சிக் கொண்டாள், அவன் குழந்தையிடம் பழகும் விதமே அமுதாவிற்கு மிகவும் பிடித்திருந்தது, விஜயின் பேச்சும் பாசமும் ஜனனியின் பிரிவினால் வந்த துக்கத்தை அவ்வப்போது காட்டி உடனே குழந்தைக்காக மகிழ்ச்சியாக மாறியது, முக்கியமாக ஜனனிக்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம், காலை கூட பிடிக்கலாம் என்றளவுக்கு யோசித்த காரணத்தால் கதிரவனுக்கு அவன் மீது மதிப்பும் மரியாதையும் வந்தது.
விஜய்யும் கதைகளை சொல்லிக் கொண்டே அவளுக்கு பால் புகட்டி பேரக்ஸ் குளுக்கோஸ் ஜூஸ் என 2 மணி நேரத்திற்கு ஒரு முறை என ஊட்டிவிட்டுக் கொண்டே அவளை நன்றாக பார்த்துக் கொண்டான். அவனின் கதைகள் புரிகிறதோ இல்லையோ ஹனிகா மட்டும் ம் கொட்டிக் கொண்டே இருந்தாள். அவளின் ஆர்வத்தைக் கண்டு விஜயும் சுவாரஸ்யமாக சிரிக்க சிரிக்க கதை சொல்லிக் கொண்டிருக்க அதைக் கேட்ட ஜனனியும் அவளது குடும்பத்தாரும் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு கட்டத்தில் விஜயோ பேசி பேசி முடித்து ஓய்ந்துப் போய் வாய் வலி வர ஆஆஆ என முனக அதைக் கேட்ட ஹனிகாவோ தன் தந்தையைப் பார்த்து கை நீட்டி அழைத்தாள்
”ம்மா ம்மா” என்றாள் அவனோ அவளின் அழைப்பில் கரைந்து
”ஒண்ணுமில்லைடா வயசாயிடுச்சில்ல அதான் பேசி பேசி வாய் வலிக்குதுடா” என சொல்ல ஜனனிக்கு என்னமோ போலானது
”என்ன உளறி வைக்கறான் அப்படி என்ன வயசாயிடுச்சி இவனுக்கு” என குழப்பமாக கேட்க அதற்கு விஜயே ஹனிகாவிடம் பதிலளித்தான்
Thank you.