(Reading time: 13 - 26 minutes)
Thoora theriyum megam
Thoora theriyum megam

“ஓ....”என்று புன்னகைத்தவர், “சரி...நீ என்ன பண்ணிட்டிருக்கே?...ஜாப்பா?...இல்லை சொந்த பிசின்ஸா?”

“ஜாப்தான் சார்!...ப்ரூக்ஸ் அண்ட் ப்ரூக்ஸ் கம்பெனில மார்க்கெட்டிங் மேனேஜரா இருக்கேன்!”

“வெரி குட்!...வெரி குட்!” என்றவர், “இன்னிக்கு டூர் எந்த ஊருக்கு?”

“திருச்சி சார்!” என்ற கைலாஷ், “இப்போதுதான் ரிடையர்ட் ஆகி கல்லூரியை விட்டே வெளிய வந்திட்டாரே?...இப்ப இவர் கிட்ட அந்த பிரம்மச்சர்யத்திற்கான காரணத்தைக் கேட்டால் என்ன?” யோசித்தவன் கடைசியில் கேட்டே விட்டான்

அதைக் கேட்டதும் “ஹா...ஹா...ஹா..”வென்று வாய் விட்டுச் சிரித்த பேராசிரியர், “கைலாஷ்..காலேஜ்ல என் முதுகுக்குப் பின்னாடி எத்தனை பேர் எத்தனை விதமான விமர்சனங்களை சொன்னாங்கன்னு எனக்குத் தெரியாதுன்னு நெனச்சிட்டியா?...தெரியும்...நல்லாவே தெரியும்!...பட் நான் ரீஆக்ட் பண்ணலை! தட்ஸ் ஆல்!” என்றவர் முகத்தைத் திருப்பி வேறு எங்கோ சில நிமிடங்கள் பார்த்து விட்டு, “பல வக்கிரமான கமெண்ட்டுகள் கூட என் காதுக்கு வந்திச்சு!...இட்ஸ் ஓ.கே!”என்றார்.

தன் கேள்விக்கான பதில் இன்னும் வரவில்லை என்பதால் அவர் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான் கைலாஷ்.

பேராசிரியர் தொடர்ந்தார், “கைலாஷ்...எனக்கு ஒரு அக்கா இருந்தாங்க...பேரு தமிழ்செல்வி...அந்த ஆண்டவனுக்கு அவ மேல என்ன கோவமோ தெரியலை முப்பது வயசிலேயே ரெண்டு பெண் குழந்தைகளோட அவளுக்கு விதவைக் கோலத்தைக் குடுத்துட்டான்..முப்பத்தியஞ்சு வயசுல அவ புருஷன் ஹார்ட் அட்டாக்குல போயிட்டான்!..அப்ப எங்களுக்கு அப்பா...அம்மா...ரெண்டு பேருமே இல்லை!...இனி எப்படி வாழறதுன்னு தெரியாம என்னோட அக்கா த்ன்னோட ரெண்டு குழந்தைகளோட ஒரு நாள் தற்கொலைக்கு முயற்சி பண்ணினாங்க!...நல்லவேளையா அது நடக்காம நான் காப்பாத்திட்டேன்!...அதுக்கப்புறம்தான் முடிவெடுத்தேன்...எனக்குன்னு ஒரு கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் தனியா ஒரு வாழ்க்கை வாழுறதை விட என்னோட வாழ்க்கை என் அக்காவுக்காகவும், அவ குழந்தைகளுக்காகவும் என்று வாழ்ந்தா என்ன?ன்னு தீர்மானிச்சேன்...அதையே செயலிலும் காட்டினேன்!”

“யூ மீன்...உங்க வாழ்க்கையை மொத்தமா அவங்களுக்காகவே தியாகம் பண்ணிட்டீங்க!”...அப்படித்தானே சார்?”

“நோ...நோ...கூடப் பொறந்த அக்காவுக்கு செய்யும் போது அது தியாகமில்லை!...கடமை...கடமை!”

கைலாஷுக்கு எங்கோ எதுவோ சுரீரென்றது. “என்னோட அக்கா பொண்ணுக ரெண்டு பேரையும் நல்லா படிக்க வெச்சேன்!..நல்ல இடத்துல மாப்பிள்ளை பார்த்து ரெண்டு பேருக்கும் சீரும்

2 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.