(Reading time: 7 - 14 minutes)
Ullam kollai poguthe
Ullam kollai poguthe

பண்ணிட்டு ஊருக்கு வந்த உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு சொல்றா.. 

அப்போ இன்னைக்கே ரிசைன் பண்ணிட்டு நாளைக்கு கல்யாணம் பண்ணிக்க...

ஜனனி கிண்டல் பண்றியா.. அவதான் புரிஞ்சுக்க மாட்டேங்கிறானா நீயுமா..."""""""

இப்போது  சசிதரன் உடன் பேசிய அந்த வார்த்தைகள் ஜனனியை கிண்டல் செய்தது. என்ன செய்வது என்று தெரியாமல் படுக்கையில் விழுந்தாள். உறக்கம் வந்தால் நன்றாக இருக்கும் என்று உறக்கத்தை நாடியவளுக்கு உறக்கம் தூரமாக சென்றது...

ஏதாவது தூக்க மாத்திரையாவது வாங்கி வரலாமா?.. என்று யோசிக்கும் அளவு வலி அவளை உலுக்கி எடுத்தது.

யாரைப் பற்றியும் எதைப் பற்றியும் அவளுக்கு யோசிக்க பிடிக்காமல் தலையணையில் முகம் புதைத்து கொண்டாள்... அவள் மனதின் வலி கண்ணீரின் வழியாய் தலையணையை நனைத்தது.

ஒரு வழியாக சமாளித்தாள். நேரம் ஆவதை உணர்ந்து தனுவை அழைத்து வர கிளம்பினாள். 

ஜனனி யின் முகத்தில் இருந்த குழப்பத்தை கண்ட தனுவை சமாளிக்க தான் திணறி போனாள்.

ஆனாலும் கோபமில்லாமல் பொறுமையாக எதை எதையோ சொல்லி தனுவை சமாளித்தாள்.

அதன் பிறகு ஆபிஸ் வீடு வேலை என்று ஒரு வழியாக தன் வலியை மறைத்து கொள்ள முயன்று வெற்றி பெற்றாள்.

ஸ்வீனா இடை இடையே அழைத்து பேசினாள். இன்னும் வர மூன்று நாட்கள் ஆகும் என்று சொன்னாள். 

அப்படி என்றால் அவனும் மூன்று நாட்கள் கழித்து தானே வருவான் என்று நினைத்தவளுக்கு மனதில் தோன்றிய வலி எதனால் ஏற்படுகிறது என்றே புரியவில்லை...

மனம் கவர்ந்தவனை பார்க்க இன்னும் மூன்று நாட்கள் காத்திருக்க வேண்டும் என்ற தவிப்பா??? அல்லது அவன் யாருடனோ இருக்கிறானே என்ற வருத்தமா?? அவளுக்கு எதுவும் புரியவில்லை... புரிந்து கொள்ள மனம் விரும்பவுமில்லை...

இரண்டு நாட்கள் கழித்தது... ஜனனி அரை நாள் விடுப்பு எடுத்து விட்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தாள். வரும் வழியில் தற்செயலாக சசிதரனை பார்க்க அவனும் அவனோடு சேர்ந்து வீட்டிற்கு வந்தான்.

இரண்டு பேரும் தேநீர் அருந்தி கொண்டே பேச அவர்களது பேச்சு அவர்கள் சிறுவயதின் நாட்களை நினைவு படுத்த பேச்சு சுவாரஸ்யமாக சென்றது.

கடந்து வந்த நாட்களை நினைத்து பேசும் போது ஏற்படும் மகிழ்ச்சியில் இருவரும் தங்கள் நிகழ்கால வாழ்வின் குழப்பத்தை மறந்து சிரித்து கொண்டு இருந்தனர்.

8 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.